டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : டொக் வைக்க போறதுலாம் இல்ல. ஒன்லி அதிரடிதான் – இளம்வீரர் பேட்டி

Gill
- Advertisement -

நாளை மறுதினம் நடைபெற உள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும், அதற்கடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அதிரடியான ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்த போகிறேன் என்று தெரிவித்துள்ளார் இந்திய அணியின் வீரர் ஒருவர். இங்கிலாந்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைத்தால் விரைவிலேயே தங்களது விக்கெட்டுகளை பேன்ஸ்மேன்கள் இழந்து விடுவார்கள் என்று முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்த நிலையில், இளம் வீரர் ஒருவர் இப்படி கூறியிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

INDvsNZ

- Advertisement -

கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அறிமுகமான சுப்மன் கில், அந்த தொடரில் சிறப்பாக விளையாடியது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடியதால், அவருக்கு இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் விளையாட்டு சேனல் ஒன்றிர்கு பேட்டியளித்திருக்கும் அவர் அதில் கூறியதாவது,

நான் இந்தியா A மற்றும் யு19 அணிகளில் இடம்பிடித்திருந்தபொது இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் விளையாடி இருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு அறிவுரை வழங்கிய பலர், நான் அதிகமான பந்துகளை விளையாடினால்தான் அதிக ரன்களை அடிக்க முடியும் என்று கூறினார்கள். அப்படி நினைத்து நான் விளையாடினால் அது பௌலர்களுக்குதான்மிகப் பெரிய அட்வான்ட்டேஜாக இருக்கும் என்பது மட்டுமில்லாமல் அவர்கள் வீசும் நிறைய தவறான பந்துகளை பவுண்டரிக்கு அடிக்காமல் விட்டுவிட நேரும். எனவே நான் அதிக ரன்களை அடிக்கும் நோக்கத்துடன் விளையாடபோகிறேன் என்று கூறிய அவர், அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார். அதில் மேலும் பேசிய அவர்,

gill

நான் தொடக்கத்தில் இருந்தே ரன்களை சேர்ப்பதற்காக விளையாடினால், அது பௌலர்களை பின்னுக்கு தள்ளும் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் மேல் அதிகமான அழுத்தத்தையும் என்னால் கொடுக்க முடியும். விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்று நினைத்து விளையாடும்போது பௌலர்கள் அதிக அளவிலான நல்ல லென்த் பந்துகளை வீசுவார்கள். அதுவே அதிரடியாக விளையாடினால் அவர்களால் தொடர்ச்சியாக லெந்த் பந்துகளை வீச முடியாது. இதனை நான் இந்தியா A மற்றும் யு19 அணிகளுக்காக இங்கிலாந்தில் விளையாடியதிலிருந்து கற்றுகொண்டேன் என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Gill

இந்திய அணியானது தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை அறிவித்திருக்கிறது. அதில் மற்ற ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான மயாங் அகர்வால் மற்றும் கே எல் ராகுலின் பெயர்கள் இடம் பெறாததால், சுப்மன் கில்தான் இந்த இறுதிப் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement