
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் போட்டிகளானது ஜூன் 13-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் களமிறங்க காத்திருக்கும் இந்திய அணியின் கேப்டனும், துவக்க வீரருமான சுப்மன் கில் முதல் இந்திய வீரராகவும், இரண்டாவது சர்வதேச வீரராகவும் ஒருநாள் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் தரம்சாலாவில் நடைபெற இருக்கும் முதலாவது ஒருநாள் போட்டியில் களமிறங்க இருக்கும் சுப்மன் கில் 47 ரன்களை அந்த போட்டியில் குவிக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்வார். கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான சுப்மன் கில் இதுவரை 61 போட்டிகளில் விளையாடி 8 சதம் மற்றும் 17 அரைசதம் என 2953 ரன்களை குவித்துள்ளார்.
இவ்வேளையில் எதிர்வரும் முதல் போட்டியில் 47 ரன்களை அடித்தால் 3000 ரன்களை பூர்த்தி செய்வார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை அதிவேகமாக 3000 ரன்களை பூர்த்தி செய்த வீரராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஹசிம் ஆம்லா முதலிடத்தில் உள்ளார் அவர். 57 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களை பூர்த்தி செய்தார்.
இதையும் படிங்க : அறிமுக டெஸ்ட் போட்டியில் அசத்திய இந்திய வீரர் மானவ் சுதருக்கு கிடைத்துள்ள – பொன்னான வாய்ப்பு
அவருக்கு அடுத்து தற்போது சுப்மன் கில் 61 இன்னிங்ஸ்களில் கிட்டத்தட்ட 3000 ரன்களை எட்டியுள்ளதால் 62 ஆவது இன்னிங்ஸில் அவர் இந்த சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோன்று இந்திய அணி சார்பாக அதிக வேகமாக 3000 ரன்களை பூர்த்தி செய்த வீரராக ஷிகர் தவான் 72 இன்னிங்ஸ்களில் இந்த சாதனை நிகழ்த்தியிருந்த வேளையில் அவரது சாதனையையும் சுப்மன் கில் முறியடித்து வரலாற்று சாதனை நிகழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.