இந்திய அணியின் ஜாம்பவானான இவர் கொடுத்த பிராக்டீஸ் தான் என்னோட சக்ஸஸ்க்கு காரணம் – சுப்மன் கில் பேட்டி

Gill

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 2 க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்தி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி சார்பாக 21 வயதான இளம் வீரர் சுப்மன் கில் ப்ரித்வி ஷாவிற்கு பதிலாக இரண்டாவது போட்டியில் களமிறங்கினார். தான் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக துவக்க வீரராக களமிறங்கிய விளையாடி வந்தார்.

gill

அதிலும் குறிப்பாக பிரிஸ்பேனில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய கில் 91 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். அவர் சதம் அடிக்க தவறினாலும் அவரது இந்த சிறப்பான ரன் குவிப்பு இந்திய அணி வெற்றி பெற பெரிதும் உதவியது. மேலும் இந்த டெஸ்ட் போட்டிகளில் 6 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அவர் 259 ரன்களை குவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வாகியுள்ள அவர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தற்போது உருவெடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இப்பொழுது நான் மிகவும் இலகுவாக உணர்கிறேன். இந்திய அணிக்காக முதல் போட்டியில் ஆடப் போகிறேன் என்ற பதட்டம் எனக்கு ஆஸ்திரேலிய தொடரின் போது இல்லை. ஏனெனில் பேட்டிங் செய்யும்போது கொஞ்சம் பதட்டம் இருந்தாலும் அதன் பின்பு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது.

Gill-1

சதம் அடித்திருந்தால் கேக் மேல் வைக்கப்பட்டிருக்கும் செர்ரி பழம் போல் இருந்திருக்கும். ஆனால் அணியின் வெற்றிக்கு பங்காற்றி இருக்கிறோம் என்பதை நினைக்கும்போதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : என்னுடைய அடுத்த கட்டத்தில் தொடர்ந்து சீரான விகிதத்தில் விளையாடுவேன். அடுத்து வரவிருக்கும் இங்கிலாந்து தொடரில் அவர்களின் பலமான பந்துவீச்சை எதிர்கொள்வது சவாலாக இருக்கும். ஆனால் அதற்கும் தயாராக ஆஸ்திரேலிய தொடர் எனக்கு ஒரு நல்ல படிப்பினை கொடுத்தது.

- Advertisement -

Gill

ஐபிஎல் தொடருக்கு முன்பாக இருபத்தொரு நாட்கள் யுவராஜ் சிங் நடத்திய பயிற்சிக்கு சென்றேன். அவர் எனக்கு நூற்றுக்கணக்கான பவுன்சர் பந்துகளை வீசி பேட்டிங் பயிற்சிகளையும் கொடுத்தார். அதுமட்டுமின்றி தனக்கு தெரிந்த அனைத்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை என்னுடன் பகிர்ந்துகொண்டார். அவரது இந்த தனிப்பட்ட பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என கில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.