நேத்து இன்னும் 2 ஓவர் மட்டும் கொடுந்திருந்தா இவரை நாங்க அவுட் ஆக்கியிருப்போம் – சுப்மன் கில் பேட்டி

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், முதல் மூன்று நாட்கள் முடிவுற்றிருக்கிறது. இந்த போட்டியின் இரண்டாவது நாளில் அற்புதமாக பேட்டிங் ஆடிய இந்திய வீரர்கள் மூன்றாவது நாளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தவே, இந்திய அணியானது முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கே மொத்த விக்கெட்டையும் இழந்தது. இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியானது மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 101 ரன்கள் குவித்துள்ளது.

Jamieson 2

- Advertisement -

அரை மணி நேரம் எஞ்சியிருந்த நிலையிலும், போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய நாளின் ஆட்டத்தை விரைவிலேயே முடிவுக்கு கொண்டு வந்தனர் கள நடுவர்கள். நேற்றைய நாள் ஆட்டம் முடிந்த பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்திருக்கும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன், இன்னும் இரண்டு ஓவர்கள் வீச எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்போம் என்று கூறியிருக்கிறார். நேற்றைய போட்டியில் இஷாந்த் சர்மா ஓவரில் நியூசிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான டெவான் கான்வே அவுட்டானதும் புது பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார் ராஸ் டெய்லர்.

புது பேட்ஸ்மேன் என்பதால் அவரை விரைவிலேயே விக்கெட் வீழ்த்தி விடலாம் என்று இந்திய வீரர்கள் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், மேற்கொண்டு இரண்டு பந்துகள் மட்டுமே வீச அனுமதித்த நடுவர்கள், அதற்குப் பிறகு போதிய வெளிச்சமில்லை என்று கூறி நேற்றைய நாள் ஆட்டத்தை விரைவாக முடித்துக் கொண்டனர்.

taylor

இதுகுறித்து தான் பேசியுள்ளார் சுப்மன் கில். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, இந்திய அணியின் பௌலர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் நன்றாகவே பந்து வீசினர். ஆனால் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. இன்றைய நாளில் மேற்கொண்டு இரண்டு ஓவர்கள் வீச எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்னும் இரண்டு விக்கெட்டுகளை நாங்கள் கைப்பற்றியிருப்போம். இருந்தாலும் நாளைக்கு ஆட்டம் தொடங்கியதும் ராஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் நாங்கள் விரைவிலேயே வீழ்த்திவிடுவோம் என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

IND

அந்த பேட்டியில் மேலும் பேசிய அவர், நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளரான கைல் ஜேமிசனை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், நாளைக்கு இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்படுவார்கள் என்றும், அதிர்ஷ்டம் எங்கள் பக்கம்தான் இருக்கப்போகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்சில் அற்புதமாக பந்து வீசி இருக்கும் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement