
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஹராரே நகரில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த தொடரினை மோசமாக துவங்கி இருந்தது. ஆனாலும் தற்போது அடுத்தடுத்து நான்கு வெற்றிகளை பெற்று இந்த தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டியானது இன்று ஹராரே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட :
20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த தொடர் வெற்றி குறித்து பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : உண்மையிலேயே இந்த தொடர் எங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் நாங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்த பிறகு அடுத்து நாங்கள் மீண்டும் கொடுத்த கம்பேக் என்பது அசத்தலாக இருந்தது.
அடுத்தடுத்து நான்கு வெற்றிகளை பெற்று இந்த தொடரை கைப்பற்றியுள்ளோம். தற்போது நமது அணியில் விளையாடும் பல வீரர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். வெவ்வேறு நாட்டிற்கு சென்று விளையாடி வருவதால் மைதானத்தின் தன்மையை கணிப்பதில் கடினம் இருக்கும்.
இதையும் படிங்க : முதல் மேட்ச்ல தோற்றதும் தென்னாப்பிரிக்க இன்பேர்மேஷன் கிடைச்சுடுச்சு.. ஜிம்பாப்வேவை வீழ்த்தியது பற்றி சுந்தர் பேட்டி
ஆனாலும் நமது வீரர்கள் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்து விளையாடுகின்றனர். அடுத்ததாக நமது அணி இலங்கை அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. ஏற்கனவே நான் அங்கு ஆசிய கோப்பை தொடரில் விளையாடிகொள்ளதால் நிச்சயம் அந்த அனுபவம் உதவும் என்று நினைக்கிறேன். எதிர்வரும் அந்த தொடருக்காக தயாராக காத்திருக்கிறோம் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.