என்னால் முதல் பந்தில் இருந்து அதிரடியாக ஆட முடியும். நான் யாரையும் காப்பி அடிக்கவில்லை – இளம்வீரர் பேட்டி

Gill

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் ராகுலுக்கு பதிலாக ரோகித் துவக்க வீரராக களமிறங்கி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரரான கில் டெஸ்ட் போட்டிக்கான அணிக்கு முதன்முறையாக தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடர் குறித்து பேட்டியளித்த கில் கூறியதாவது : நான் இந்திய அணியின் டெஸ்ட் அணிக்கு தேர்வானது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் என்னுடைய ஆட்டம் தற்போது சிறப்பாக இருக்கிறது. என்னால் முதல் பந்தியில் இருந்து அதிரடியாக ஆட முடியும் மேலும் நான் என்னுடைய ரோல் மாடல்களை பாலோ செய்கிறேன். ஆனால் அவர்களைப் போன்ற பேட்டிங் ஸ்டைல் எனக்கு கிடையாது.

Gill

எனக்கென்று தனி ஸ்டைல் உள்ளது. அதன் மூலம் நான் இந்திய அணிக்காக ரன்களை குவிக்க முடியும் என்று நம்புகிறேன். என்னுடைய ஆட்டத்தை தொடர்ச்சியாக சிறப்பாக வைத்துக் கொள்ள நான் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அணிக்கு தேவையான ரன்களை குவிக்க முடியும் என்று நம்புகிறேன் என்று கில் கூறினார்.