கோலி என்கிட்ட இதை மட்டும் தான் சொன்னாரு. அதை நெனச்சி தான் விளையாடி வரேன் – சுப்மன் கில் பேட்டி

Gill

இந்திய அணியின் இளம் துவக்க வீரரான சுப்மன் கில் கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இதுவரை 7டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 378 ரன்களை குவித்துள்ளார். மேலும் ரோகித் சர்மாவுடன் இறங்கும் ஒப்பனர்களை மாற்றி மாற்றி பார்த்த பிசிசிஐக்கு சற்றும் நம்பிக்கை ஊட்டும் வகையில் கில்விளையாடி வருவதால் அவரே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

gill

ஜூன் 18-ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் தேர்வாகியுள்ள சுப்மன் கில் நிச்சயம் அந்த இடத்தில் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கையை பெற்றுள்ளார். இந்நிலையில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவது குறித்து பேசியுள்ள கில் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எப்போதும் பயமில்லாமல் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என என்னிடம் கூறுவார். ஒரு பேட்ஸ்மேனுக்கு மனநிலை என்பது மிகவும் முக்கியம் அதோடு பேட்டிங் செய்ய நல்ல மனநிலையில் இருக்க வேண்டும் அப்போது தான் நமது பேட்டிங்கில் கவனம் சிதறாமல் சிறப்பாக விளையாட முடியும் என்று வலியுறுத்துவார்.

Gill

அவரின் இந்த அறிவுரைப்படியே நான் நல்ல மனநிலையோடு பயமில்லாமல் விளையாடி வருகிறேன். நான் களத்தில் இருக்கும் போது ரோகித் சர்மாவுடன் இணைந்து பவுலர்களை பற்றி பேசிக்கொண்டு விவாதிப்போம். அதன்படியே நாங்கள் பவுலர்கள் வீசும் பந்தை எதிர் கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

Gill

ஒரு ஓப்பனராக இங்கிலாந்தில் மட்டுமல்ல எங்கு விளையாடினாலும் சரி ஒரு நாளின் மூன்று செசன்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் எப்போதெல்லாம் மேகமூட்டமாக இருக்கிறதோ அப்போது பந்து ஸ்விங் ஆகும். எப்போதெல்லாம் வெளியில் அடிகிறதோ அப்போது பேட்டிங்கிற்கு மைதானம் சாதகமாக இருக்கும் எனவும் கில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement