2 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாடுவாரா? இந்திய அணியின் திட்டம் குறித்து பேசிய – சுப்மன் கில்

Gill and Bumrah
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது அக்டோபர் இரண்டாம் தேதி அகமதாபாத் மைதானத்தில் துவங்க இருக்கும் வேளையில் இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜஸ்ப்ரீத் பும்ரா 2 போட்டிகளிலும் விளையாடுவாரா ? : சுப்மன் கில் பதில்

இந்நிலையில் எதிர்வரும் இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் சமீப காலமாகவே அவர் பணிச்சுமையை கருத்தில் கொண்டு பல்வேறு போட்டிகளில் ஓய்வெடுத்து வருவதால் இந்த டெஸ்ட் தொடரில் அவர் முழுமையாக பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

தற்போது அகமதாபாத் நகரில் வந்தடைந்துள்ள இந்திய அணியுடன் இணைந்துள்ள பும்ரா பயிற்சி ஏதும் எடுக்காமல் இருந்தாலும் முதல் போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான திட்டம் என்ன? என்பது குறித்தும், பும்ரா அனைத்து போட்டிகளின் விளையாடுவாரா? என்பது குறித்தும் பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் :

தற்போது வரை எந்த ஒரு முடிவையும் நாங்கள் முன்கூட்டியே எடுக்கவில்லை. ஆனால் போட்டி நாளை ஆரம்பிக்கும் வேளையில் நாளை காலை பிளேயிங் லெவன் உங்களுக்கு தெரிய வரும். இந்த தொடரில் நாங்கள் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல முடிவு செய்துள்ளோம்.

- Advertisement -

அதே வேளையில் மைதானத்தில் தன்மை, தட்பவெப்பம் மற்றும் சூழ்நிலையை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரை சேர்க்கலாமா? என்பது குறித்தும் யோசித்து வருகிறோம். ஆனால் இதற்கெல்லாம் முடிவு நாளை காலை உங்களுக்கு நிச்சயம் தெரிய வரும்.

இதையும் படிங்க : இந்திய அணியின் அடுத்த டாப் ஆல்ரவுண்டராக நிதீஷ் ரெட்டி கண்டிப்பா மாறுவார் – முன்னாள் வீரர் நம்பிக்கை

ஆசிய கோப்பை தொடரில் பும்ரா சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். இந்த தொடரின் இரண்டு போட்டியிலும் அவர் விளையாட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அவருடைய உடற்தகுதி அதற்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் நிச்சயம் இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாடுவார் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement