இப்படி ஒரு டீமை வச்சிக்கிட்டு நாங்க அந்த பைனல்ல ஆடலனா அதுதான் ஏமாற்றம் – சுப்மன் கில் பளீர்

Shubman Gill
- Advertisement -

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வினை அறிவித்திருந்தனர். அப்படி அவர்கள் ஓய்வை அறிவித்த பிறகு அடுத்து முக்கிய பொறுப்புகள் யாருக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் பதவி வழங்கப்பட்டது. எதிர்கால நிரந்தர கேப்டனாக பார்க்கப்படும் அவருக்கு டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியை பிசிசிஐ ஒருமனதாக விரும்பி வழங்கியிருந்தது.

இது நடக்கலனா தான் எனக்கு ஏமாற்றம் : சுப்மன் கில்

அதனை தொடர்ந்து சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தங்களது முதல் தொடராக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அனுபவ வீரர்கள் இன்றி இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது.

- Advertisement -

இளம் கேப்டனான அவரோடு இணைந்து அனுபவ வீரர்களான ஜடேஜா, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரும் அசத்தலான செயல்பாட்டை அந்த தொடரில் வெளிப்படுத்தியிருந்தனர். வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தொடர்ந்து தற்போது சொந்த மண்ணில் முதல் முறையாக கேப்டன் பதவியை ஏற்று சுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்த தொடரின் முதலாவது போட்டி அஹமதாபாத் நகரில் நடைபெற்று வரும் வேளையில் முதல் நாளான இன்றே இந்திய அணியின் கை இந்த போட்டியில் ஓங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடுவது தான் எங்கள் இலக்கு என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

அனைவருமே வெற்றியை விரும்பி தான் விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்திய அணியும் வெற்றியை நோக்கியே நகர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். தற்போதுள்ள இந்திய அணி மிக வலுவான அணி. இத்தனை திறமையான வீரர்கள் இருந்தும் நாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை என்றால் தான் நான் மிகப்பெரிய ஏமாற்றமடைவேன்.

இதையும் படிங்க : சாய் சுதர்சனை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பாசத்தால் தான் தக்க வைக்கிறாரா? சுப்மன் கில் – ரசிகர்கள் கேள்வி

தற்போதுள்ள நமது அணியில் வீரர்கள் சரி சமமான பலத்துடன் உள்ளதால் நிச்சயம் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு நாம் செல்வோம் என சுப்மன் கில் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ள இந்திய அணி இரண்டு முறையும் இறுதிப்போட்டியின் போது தோல்வியை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement