யுவராஜ் சிங்கை பார்த்துதான் இந்த பழக்கத்தை நான் கற்றுக்கொண்டேன் – கில் பெருமிதம்

Gill
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான சுப்மான் கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் கூட இவர் சிறப்பாக விளையாடினார். மேலும் இளம் வயதில் இரட்டை சதமடித்து சாதனை புரிந்தார்.

gill

இந்நிலையில் தற்போது அவர் பெங்களூரில் உள்ள நேஷனல் அகாடமி பயிற்சி பெற்று வருகிறார். அவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ஷ்டம் இன்றி அவர் அணியில் தேர்வாகாமல் போனார். இந்நிலையில் தற்போது பெங்களூரில் இருந்து அவர் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : நான் இந்திய அணிக்காக விளையாடும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

- Advertisement -

எனக்கு கிடைக்கும் வாய்ப்பை நான் நிச்சயம் பயனுள்ளதாக மாற்றுவேன். தற்போது நான் பெங்களூரில் பயிற்சி பெற்று வருகிறேன். நான் பயிற்சி முடித்து வெளியே வரும் போது இளம் ரசிகர்கள் என்னிடம் ஆட்டோகிராஃப் வேண்டும் என்று கேட்டார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அனைவருக்கும் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து மேலும் அவர்களுடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன். இந்த பழக்கம் எனக்கு யார் இடத்தில் இருந்து வந்தது என்றால் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அவரிடமிருந்துதான் வந்தது.

Gill

ஏனெனில் நான் சிறுவயதில் இருக்கும் போது யுவராஜ் மொஹாலியில் ஆடும் பொழுது நான் வேடிக்கை பார்ப்பேன். அப்போது யுவராஜ் பெவிலியன் நோக்கி வருகையில் நான் அவரிடம் சென்று கையெழுத்து மற்றும் புகைப்படம் கேட்பேன். அவரும் எந்தவித சலனமும் இன்றி அனைவருக்கும் கையெழுத்திட்டு பின்பு புகைப்படமும் எடுத்துக் கொள்வார். அவருடைய அந்த நல்ல பழக்கத்தை நான் இப்போதும் தொடர்ந்து வருகிறேன். என்னிடம் யார் வந்து ஆட்டோகிராப் அல்லது புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டாலும் நான் அவர்களுடன் சென்று அதனை செய்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறுவேன் என்று நெகிழ்ச்சியுடன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement