- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நல்ல ஸ்டார்ட் கெடச்சா.. இதை செய்யனும் அதுதான் என்னோட பழக்கமா மாறிடுச்சு – சுப்மன் கில் பேச்சு

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 154 ரன்களையும், இஷான் கிஷன் 125 ரன்களையும் குவித்தனர்.

இரண்டாவது போட்டியில் சதம் அடித்தது குறித்து பேசிய : சுப்மன் கில்

பின்னர் 403 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்கள் மட்டுமே குவிந்ததால் இந்திய அணி 170 முதல் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. அதோடு இந்த தொடரையும் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்தும், தன்னுடைய ஆட்டம் குறித்தும் பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது : இந்த போட்டியில் நான் மிகவும் சோர்வாக உணர்ந்தேன். ஏனெனில் ஏகப்பட்ட தசைப்பிடிப்பு எனக்கு இந்த போட்டியின் போது ஏற்பட்டது. 40 முதல் 45 ஓவர்கள் வரை கடுமையான வெயிலில் விளையாடியதால் என்னுடைய உடம்பில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

இருந்தாலும் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். இந்த ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்தே நான் நம்பிக்கையோடு விளையாடினேன். பந்து நான் நினைத்த இடத்திற்கு சென்றது. இந்த தொடரில் நான் என்னுடைய பேட்டிங்கில் நிறைய ஓவர்களை விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் இந்த இரண்டாவது ஆட்டத்திலும் நல்ல ஸ்டார்ட் கிடைக்கும் போது அதை பெரிய ஒரு இன்னிங்ஸ்ஸாக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இரண்டாவது போட்டியிலும் சாதனையுடன் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி – தொடரை கைப்பற்றிய இந்திய அணி

அந்த வகையில் இந்த போட்டியில் சதம் அடித்ததற்கு பிறகு 200 ரன்களை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதே வேளையில் ரன் ரேட்டையும் சரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் நாங்கள் பெரிய இலக்கை நோக்கி நகர்ந்தது மகிழ்ச்சி. இந்த போட்டி முற்றிலும் மிகச் சிறப்பாக இருந்தது என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -