அவங்க 2 பேருக்காக தான் நான் கம்முனு இருந்தேன்.. தன்னுடைய முடிவு குறித்து – சுப்மன் கில் விளக்கம்

Shubman Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது கடந்த ஜூலை 23-ஆம் தேதி துவங்கி நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் தோல்வியை நோக்கி சென்ற இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்ஸின்போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்த போட்டியினை டிரா செய்து அசத்தியது.

அவங்க 2 பேரும் சதத்திற்கு தகுதியானவர்கள் : சுப்மன் கில்

இதன் காரணமாக அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த போட்டியில் கிடைத்த முடிவு ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த நான்காவது போட்டியில் முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 358 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 669 ரன்களை குவித்ததால் 311 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 5 ஆம் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 425 ரன்கள் குவித்திருந்த வேளையில் இந்த ஆட்டம் டிராவில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் மிகச் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 103 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 107 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் ஜடேஜா மற்றும் சுந்தர் ஆகியோர் அரைசதம் கடந்து சதத்தை நெருங்கிய வேளையில் முன்கூட்டியே போட்டியை முடித்துக் கொள்ளலாம் என இங்கிலாந்து வீரர்கள் முறையிட்டனர். ஆனால் அந்த முடிவினை இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஏற்றுக்கொள்ளவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து முன்கூட்டியே டிரா செய்யாதது ஏன்? என்பது குறித்து பேசிய கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் பேட்டிங்கை நினைத்து நான் பெருமை அடைகிறேன். களத்தில் எவ்வளவு நேரம் நின்று விளையாட முடியுமோ அவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த போட்டியில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பின் வரிசையில் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க : 5 ஆவது போட்டியில் இருந்து விலகிய ரிஷப் பண்ட்.. இந்திய அணியில் இணைந்த தமிழக வீரர் – விவரம் இதோ

அவர்களது இந்த சிறப்பான இன்னிங்ஸ் சதத்திற்கு தகுதியானது என்று நினைத்தோம். அதன் காரணமாகவே நான் போட்டியை முன்கூட்டியே முடித்துக் கொள்ள ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் அவர்கள் இருவரும் சதம் அடித்த பிறகு போட்டி டிராவானது என சுப்மன் கில் விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement