இதை முதல் மேட்ச்லயே செஞ்சுருந்தா இந்நேரம் 4 – 0ன்னு லீடிங்ல இருப்போம்.. கேப்டன் கில் பேட்டி

Shubman Gill 6
- Advertisement -

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ஜூலை 13ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 152/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து 153 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக 13 பவுண்டரி 2 சிக்சருடன் 93* (53) ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் கில் 58* (39) ரன்கள் எடுத்ததால் 15.2 ஓவரிலேயே 156/0 ரன்கள் எடுத்த இந்தியா எளிதாக வென்றது. அதனால் 3 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா கடைசி போட்டிக்கு முன்பாகவே இத்தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

முதல் போட்டியில் தவறியது:
குறிப்பாக முதல் போட்டியில் இதே மைதானத்தில் 116 ரன்களை அடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்ததால் எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்தனர். ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு கூட ஜிம்பாப்வே தகுதி பெறவில்லை. ஆனால் அந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி ஜிம்பாப்வேவிடம் தோல்வியை சந்தித்தது.

இருப்பினும் 2வது போட்டியிலிருந்து சுதாரித்து விளையாடிய இந்திய அணி தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்றது. அதனால் முதன்மை வீரர்கள் இல்லாமலேயே இத்தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா தங்களை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் இப்படி சேசிங் செய்வதை தாங்கள் தவற விட்டதாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதைச் செய்திருந்தால் இந்நேரம் 4 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்திருப்போம் என்றும் அவர் கூறினார். மேலும் தேவைப்பட்டால் கடைசி போட்டியில் ஓப்பனிங் ஜோடியில் மாற்றம் செய்வோம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சேசிங் செய்வதைப் பற்றிய நாங்கள் முக்கியமாக பேசினோம். ஏனெனில் முதல் போட்டியில் எங்களால் அதைத் தான் இங்கே செய்ய முடியவில்லை. இந்த வெற்றி நல்ல உணர்வை கொடுக்கிறது. ஆனால் வேலை முடியவில்லை. இன்னும் ஒரு போட்டி இருக்கிறது”

இதையும் படிங்க: மாறாத 5.. 2007 ஃபைனலை ரிப்பீட் செய்த இந்தியா சாம்பியன்.. 17 வருடம் கழித்தும் பாகிஸ்தானுக்கு நேர்ந்த பரிதாபம்

“அதுப் பற்றி இன்னும் எங்கள் பயிற்சியாளரிடம் நான் விவாதிக்கவில்லை. எனவே தேவைப்பட்டால் ஓப்பனிங் ஜோடியில் நாங்கள் மாற்றம் செய்வோம். அதை டாஸ் வீசும் போது நான் உங்களிடம் சொல்கிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து கடைசி போட்டி ஜூலை 14ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹராரே நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement