
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் தனது ஒன்பதாவது சதத்தை பதிவு செய்தார். அதோடு இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக தனது முதல் சதத்தையும் பதிவு செய்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருந்தார். அந்தவகையில் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் :
மூன்றாவது வீரராக களம் இறங்கிய அவர் 110 பந்துகளை சந்தித்து 22 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை அவர் வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
அதனை தொடர்ந்து இந்த இரண்டாவது போட்டியிலும் 154 ரன்கள் குவித்து தனது அற்புதமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதோடு இந்த இன்னிங்ஸ் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவிற்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக ஒருநாள் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை அவர் நிகழ்த்தியுள்ளார்.
அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சுப்மன் கில் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இன்றைய போட்டியில் அவர் அடித்த இந்த 154 ரன்கள் மூலம் ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை வெகு விரைவாக கடந்த இந்திய வீரர் என்பது மட்டுமின்றி இந்த 3000 ரன்களை அவர் 3016 பந்துகளில் அடித்துள்ளார்.
இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்த சுப்மன் கில் – விவரம் இதோ
இவருக்கு முன்னதாக இந்திய அணி சார்பாக ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை குறைந்த பந்துகளில் அடித்த வீரராக கபில்தேவ் 2995 பந்துகளில் 3000 ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்த நிலையில் அவருக்கு அடுத்து சுப்மன் கில் 3016 பந்துகளுடன் 3000 ரன்களை அடித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.