ஏசியன் கேம்ஸ் 2023 : 49 பந்தில் 100 ரன்.. சுப்மன் கில்லின் வரலாற்று சாதனையை உடைத்த – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

Jaiswal
- Advertisement -

சீன நாட்டில் நடைபெற்று வரும் ஏசியன் கேம்ஸ் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் இதுவரை 50 பதக்கங்களுக்கும் மேல் குவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தங்க பதக்கம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூலம் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று அக்டோபர் 3-ஆம் தேதி காலை துவங்கிய காலிறுதி போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி நேபாள் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.

அதன்படி இன்று துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்து அசத்தியது. பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நேபாள் அணியானது விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 பந்துகளில் 50 ரன்களை கடந்ததோடு 49 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 100 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரரான சுப்மன் கில்லின் மாபெரும் சாதனை ஒன்றினையும் அவர் முறியடித்துள்ளார்.

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணிக்காக இதுவரை 5 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த ஜெய்ஸ்வால் ஒரு அரை சதுத்துடன் 132 ரன்கள் குவித்திருந்தார். இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது ஆறாவது போட்டியில் இன்று பங்கேற்ற அவர் 48 பந்துகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

- Advertisement -

இதன் மூலம் இந்திய அணி சார்பாக டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன்பாக இந்திய அணி சார்பாக சுப்மன் கில் 23 வயது 146 நாட்களில் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசியிருந்தார். இந்நிலையில் அவரது சாதனையை இன்று ஜெயிஸ்வால் 21 வயது 9 மாதம் 13 நாட்கள் என்கிற கணக்கில் தற்போது முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க : 2011-ல சச்சினுக்கு கொடுத்த மரியாதையை இம்முறை விராட் கோலிக்கு குடுக்கனும் – சேவாக் விருப்பம்

அதுமட்டும் இன்றி இதுவரை டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக சதம் அடித்த 8 வீரர்களில் இவர் 2-ஆவது இடது கை ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வாலுக்கு முன்னதாக இந்திய அணி சார்பாக டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement