இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? துணைக்கேப்டன் சுப்மன் கில் – அளித்த பதில்

Gill-and-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தொடரின் ஆரம்பித்திலேயே முன்னிலை வகிக்கிறது.

விராட் கோலி இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா? :

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதுகுறித்து டாசின் போது பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : விராட் கோலிக்கு முழங்காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை என்றும் அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களமிறங்குவார் என்றும் அறிவித்திருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த முதல் ஒருநாள் போட்டியை தவறவிட்ட விராட் கோலி இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரானது துவங்க இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி விளையாட வேண்டியது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இவ்வேளையில் முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த கையோடு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது போட்டியின் போது விராட் கோலி விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்தார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சனை பெரிய பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை. எனவே நிச்சயமாக அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்று நினைக்கிறேன் என்று பதில் அளித்திருந்தார். இதன் மூலம் விராட் கோலி நிச்சயம் இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : எனக்கு பிளேயிங் லெவனில் இடமில்லை என்று சொன்னார்கள்.. வெற்றிக்கு பின்னர் உண்மையை சொன்ன – ஷ்ரேயாஸ் ஐயர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த முதல் ஒருநாள் போட்டி துவங்கும் முன்னதாக பயிற்சியில் கலந்து கொண்ட கோலி போட்டி நாளுக்கு முந்தைய நாள் தான் முழங்காலில் அசவுகரியத்தை உணர்ந்ததால் முன்னெச்சரிக்கை காரணமாகவே முதல் போட்டியில் விளையாடவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நிச்சயம் அவர் இரண்டாவது போட்டியில் அணியில் இடம் பெற்று விளையாடுவது உறுதி.

Advertisement