ஜூலை இரண்டாம் தேதி இங்கிலாந்து – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதன் காரணமாக இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.
முன்னதாக முதல் போட்டியில் புதிய கேப்டன் சுப்மன் கில் பெரும்பாலான சமயங்களில் சிறப்பாக விளையாடிய இந்தியா வெற்றியை கையில் வைத்திருந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக பேட்டிங்கில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 சதங்கள் அடித்து இந்தியா சாதனை படைத்தது. ஆனால் லோயர் ஆர்டரில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் யாருமே 10 ரன்களை கூட அடிக்காமல் ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
நம்புவதில் அர்த்தமில்ல:
அதனால் பேட்டிங்கில் சிறப்பாக ஃபினிஷிங் செய்யத் தவறிய இந்திய அணி ஃபீல்டிங் துறையில் 7 கேட்ச்களை கோட்டை விட்டதும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் லோயர் ஆர்டரை நம்ப வேண்டாம் என்று இந்திய பேட்ஸ்மேன்களை கேப்டன் சுப்மன் கில் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே நன்கு செட்டிலாகும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாராக இருந்தாலும் எக்ஸ்ட்ரா ரன்களை அடித்து இந்தியாவை சரிய விடாமல் தாங்கிப் பிடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அது தமக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கும் கில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது நாங்கள் எப்போதும் பேசக்கூடிய ஒரு விஷயமாகும். சில நேரங்களில் உலகின் மற்ற அணிகளைப் போல எங்களுடைய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் பங்காற்ற முடிவதில்லை. அவர்களிடம் மற்ற அணிகளை பாருங்கள் என்று தெரிவித்துள்ளேன்”
கேப்டன் கில் கோரிக்கை:
“147 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நான் அவுட்டான விதத்தை வைத்துப் பார்க்கையில் ரிஷப் பண்ட்டுடன் சேர்ந்து இன்னும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் நல்ல பந்தில் அவுட்டானால் அது பரவாயில்லை. ஆனால் உங்களுடைய பேட்டிங் வரிசையில் போதுமான ஆழமில்லை”
இதையும் படிங்க: கில், கம்பீர் அவர விளையாட வெச்சா.. இந்தியா 20 விக்கெட்ஸ் எடுத்து 3 வெற்றி உறுதி.. அஸ்வின் அட்வைஸ்
“எனவே போது டாப் ஆர்டரில் விளையாடும் நீங்கள் நன்றாக செட்டிலாகும் இன்னும் கொஞ்சம் பொறுப்பை எடுத்துக்கொண்டு போட்டி முழுமையும் பேட்டிங் செய்ய முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார். இந்த நிலைமையில் 2வது போட்டியில் நிதிஷ் ரெட்டி இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே போல குல்தீப் இந்திய அணிக்குள் வருவதற்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



