GT vs SRH : ஜோடியாக சாதனை படைத்த தமிழக வீரர், ஹைதராபாத்தை பந்தாடிய கில் – குஜராத்துக்காக இரட்டை சாதனை

Shubman Gill Sudarsan
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 15ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 62வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. அதில் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் தவிக்கும் ஹைதராபாத் கிட்டத்தட்ட ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியான நிலையில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் இப்போட்டியில் வென்று அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்படும் களமிறங்கியது.

அந்த நிலைமையில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் வந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே சஹா டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

சாதனை ஜோடி:
அதில் ஒருபுறம் சாய் சுதர்சன் நங்கூரமாக நின்று நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் ஹைதராபாத் பவலர்களை அதிரடியாக எதிர்கொண்ட சுப்மன் கில் தற்போதுள்ள நல்ல ஃபார்மை பயன்படுத்தி முதல் ஆளாக அரை சதமடித்து குஜராத்தை வலுப்படுத்தினார். அந்த வகையில் நேரம் செல்ல செல்ல அவுட்டாகாமல் அடம் பிடித்த இந்த ஜோடி ஹைதராபாத் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறி 15 ஓவர்கள் வரை நிலைக்கு நின்று 147 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து சிறந்த தொடக்கத்தை கொடுத்த போது 6 பவுண்டரி 1 சிக்சருடன் சாய் சுதர்சன் 47 (36) ரன்களில் அவுட்டாகி அரை சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

இருப்பினும் அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் அமைத்த குஜராத் ஜோடி என்ற சாதனையும் அவர் படைத்தார். அந்தப் பட்டியல்:
1. சுப்மன் கில் – சாய் சுதர்சன் : 147*, ஹைதராபாத்துக்கு எதிராக, 2023
1. சுப்மன் கில் – ரிதிமான் சஹா : 142, லக்னோவுக்கு எதிராக, 2023

- Advertisement -

இருப்பினும் அந்த நிலைமையில் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாட முயற்சித்து 8 (6) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் 7 (5)ரன்களில் நடராஜன் வேகத்தில் ஆட்டமிழந்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த ராகுல் திவாட்டியாவும் 3 (3) ரன்களில் அவுட்டானதால் கடைசி நேரத்தில் தடுமாறிய குஜராத்துக்கு தொடர்ந்து மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் சதத்தை விளாசி அசத்தினார்.

அத்துடன் ஐபிஎல் தொடரில் குஜராத்துக்காக சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றை படைத்த அவர் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார். இதற்கு முன் குஜராத் அணிக்காக வேறு எந்த வீரரும் சதமடிக்காத நிலையில் அவருக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் அடித்த வீரராக கேப்டன் ஹர்திக் பாண்டியா 768 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

அத்துடன் கடந்த பிப்ரவரியில் இதே அகமதாபாத் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்த அவர் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் அதே மைதானத்தில் சதமடித்து அசத்தினார். தற்போது தன்னுடைய முதல் ஐபிஎல் சத்தத்தையும் பதிவு செய்துள்ள அவர் அகமதாபாத் மைதானத்தில் ராஜாங்கம் நடத்தி வருகிறார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: சாப்ட் சிக்னலுக்கு குட் பை, ஐசிசி அறிவித்துள்ள 3 புதிய ரூல்ஸ் – இந்தியா ஏமாற்றியதாக பாக் ரசிகர்கள் குமுறல், உண்மை இதோ

இருப்பினும் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 101 (58) ரன்கள் குவித்து ஆட்டமிழந்த அவருக்குப் பின் வந்த வீரர்கள் வரிசையாக வந்த வாக்கிலேயே சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் 20 ஓவர்களில் குஜராத் 188/9 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

Advertisement