- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு மேலும் ஒரு இளம்வீரர் கேப்டனாக அறிவிப்பு – அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட பி.சி.சி.ஐ

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டில் இருந்தும் வெளியேறியதற்கு பிறகு அணியின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றார். ஆனால் அவர் பொறுப்பேற்ற சில தொடர்களிலேயே அவருக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கப்பட்டு அடுத்த அடுத்த கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் கடந்த ஏழு மாதங்களில் இந்திய அணியில் ஏழு வீரர்கள் வரை கேப்டன்சி செய்து விட்டனர்.

அதிலும் குறிப்பாக கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஹார்டிக் பாண்டியா என இளம் வீரர்களுக்கும் அடுத்தடுத்து கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணியில் இத்தனை கேப்டன் மாற்றமா என்று பலரும் தங்களது விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். ஆனால் அது குறித்து பேசியிருந்த ரோஹித் சர்மா கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணியில் அடுத்த தலைமுறை வீரர்களை கேப்டனாக்கி பார்ப்பது சரியான ஒன்றுதான் என்றும், அவர்களுக்கு இதுபோன்ற சர்வதேச கிரிக்கெட்டில் அணியை தலைமை தாங்கும் திறன் இருக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கவே இந்திய அணி நிர்வாகம் இப்படி தொடர்ச்சியாக கேப்டன்களை தேர்வு செய்து வருவதாகவும் ரோகித் சர்மா தெளிவான விளக்கத்தை அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு மேலும் ஒரு வீரர் கேப்டனாக தயாராகி வருகிறார் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவரம் வெளியானதில் இருந்து சுப்மன் கில் இந்திய அணிக்கு தலைமை தாங்குவது எப்படி சாத்தியம் என்று பலரும் யோசித்து வருகின்றனர். ஆனால் அது உண்மைதான்.

- Advertisement -

அந்த வகையில் செப்டம்பர் மாதம் இந்தியா வரும் நியூசிலாந்து ஏ அணி இங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரவபூர்வமற்ற ஒருநாள் தொடரிலும் இந்திய ஏ அணியுடன் விளையாட இருக்கிறது. அந்த வகையில் ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களுக்கு அணியின் கேப்டனாக சுப்man கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடைக்குறித்து பேசிய டேவிட் வார்னர் – பேசியது என்ன? அவரது ரியாக்சன் இதோ

இந்த இந்திய ஏ டெஸ்ட் அணியில் வாஷிங்டன் சுந்தர், சர்பராஸ்கான், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், சபாஷ் அகமது மற்றும் ஜெய்ஸ்வால், ராஜாட் பட்டிதார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒரு நாள் அணியில் பிரித்திவி ஷா, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by