
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி 12ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 357 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 112, ஸ்ரேயாஸ் ஐயர் 78, கோலி 52 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக அடில் ரசித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து மீண்டும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 34.2 ஓவரில் 214க்கு சுருண்டது. அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 38, டாம் பாண்டன் 38 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப், பாண்டியா, அக்சர் படேல், ராணா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.
அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்து 2025 சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தயாராக இருக்கிறோம் என்பதையும் காண்பித்துள்ளது. மறுபுறம் 3 – 0 என்ற கணக்கில் தோற்றாலும் கவலைப்பட மாட்டோம் என்று சொன்ன இங்கிலாந்து கடைசியில் ஒய்ட்வாஷ் தோல்வியை சந்தித்தது.
இந்தத் தொடரில் 2 அரை சதம், ஒரு சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய துணைக் கேப்டன் கில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். அது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் நன்றாக உணர்கிறேன். இது என்னுடைய சிறந்த சதங்களில் ஒன்றாகும். ஏனெனில் பிட்ச் ஆரம்பத்தில் கொஞ்சம் சவாலாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவாக இருந்தது”
“அதை சமாளித்து விளையாடியதால் திருப்தி. அதில் கொஞ்சம் வேகம் இருந்தது. அந்தச் சூழ்நிலைகளில் வெற்றிப் பெறுவதற்கான திட்டம் எளிதானது. அதாவது ஸ்ட்ரக்கை அடிக்கடி மாற்றி பவர் பிளேவில் அதிகமான விக்கெட்டுகளை இழக்கக்கூடாது என்பதாகும். மேலும் வேகத்தை உருவாக்கி அதை அங்கிருந்து தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே திட்டமாகும்”
இதையும் படிங்க: 2023 உ.கோ மாதிரி தோற்றாலும்.. 3 – 0ன்னு வென்றாலும் இதை செஞ்சு இந்தியா சாம்பியனாகவே இருக்கும்.. ரோஹித் பேட்டி
“உங்களுக்கு எதிராக வருவதை நோக்கி ரியாக்சன் செய்ய வேண்டும். அதைத் தவிர அதிகமாக எதையும் சிந்திக்கக் கூடாது” எனக் கூறினார். அந்த வகையில் தன் மீதான விமர்சனங்களுக்கு கில் பதிலடி கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.