விராட், ரோஹித் எனக்கு.. இந்திய அணியில் அதை ஈஸியா செய்ய ஹெல்ப் பண்றாங்க.. கேப்டன் கில் பேட்டி

Shubman Gill 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. ஜனவரி 11ஆம் தேதி வதோதராவில் துவங்கும் அத்தொடரில் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விராட் கோலி, ரோஹித் சர்மா இந்திய அணிக்காக விளையாட உள்ளார்கள். 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது.

இருப்பினும் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு ரோஹித்தை கழற்றி விட்ட தேர்வுக்குழு கில் தலைமையில் 2027 உலகக் கோப்பைக்கு புதிய இந்திய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அந்த வாய்ப்பில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் கில் தலைமையிலான இந்திய அணி 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது. இருப்பினும் கடைசிப் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற விராட், ரோஹித் முக்கிய பங்காற்றினார்கள்.

- Advertisement -

விராட், ரோஹித் இருப்பதால்:

அடுத்து நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடரில் சுப்மன் கில் கழுத்து வலியால் விளையாடவில்லை. எனவே கேஎல் ராகுல் தலைமையில் அத்தொடரில் அசத்திய இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வெல்ல விராட், ரோஹித் முக்கிய பங்காற்றினார்கள். இந்நிலையில் புதிய கேப்டனான தமக்கு இந்திய அணியை வழி நடத்துவதற்கு விராட், ரோஹித் உதவுவதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கில் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் ஆல் டைம் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவர். விராட் பாய் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். எனவே அவர்கள் உங்களது அணியில் இருக்கும் போது உங்களது வாழ்க்கை இன்னும் எளிதாகும். போட்டியில் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் உதவுவார்கள்”

- Advertisement -

என் வேலை எளிது:

“ஏனெனில் தங்களுடைய கேரியரில் பலமுறை அவர்கள் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்திருப்பார்கள். எனவே கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் அவர்களிடம் சென்று அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் அல்லது என்ன செய்ய விரும்புவார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது கேப்டனாக உங்களுக்கு மதிப்புள்ள தகவல்களாக இருக்கும்”

இதையும் படிங்க: தெ.ஆ’விடம் தோற்க இதான் காரணம்.. அதான் இந்திய அணிக்கு இந்த 15 நாள் பிளானை கொண்டு வரோம்.. கில் பேட்டி

“எங்களுடைய அணியின் சூழல் நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்ன 2 வீரர்கள் எங்கள் அணியில் தசாபத்திற்கும் மேலாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதுமே இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சிக்கக் கூடியவர்கள். சொல்லப்போனால் கடந்த தொடரில் கூட அவர்கள் எப்படி விளையாடி நாங்கள் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். எனவே அவர்கள் அணியில் இருப்பது மிகவும் சிறந்த சூழலை அமைத்துக் கொடுக்கிறது” என்று கூறினார்.

Advertisement