- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ப்ரோ என்னோட பொருளை உடைச்சுறாதீங்கன்னு சொன்னேன்.. ரிஷப் பண்ட் செய்த சேட்டையை பகிர்ந்த சுப்மன் கில்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 376, 287-4 ரன்கள் எடுத்தது. மறுபுறம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்த வங்கதேசம் 2வது இன்னிங்ஸில் 3வது நாள் முடிவில் 158-4 ரன்கள் கொடுத்துள்ளது. அதனால் 515 ரன்களை துரத்தும் அந்த அணி போட்டியில் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

முன்னதாக இப்போட்டியில் 634 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனியின் சாதனையை சமன் செய்தார். மேலும் ஒரு சமயத்தில் இந்தியாவின் அபார ஆட்டத்தால் செய்வதறியாது தவித்த வங்கதேச கேப்டனுக்கு அவர் தோனியை போல ஃபீல்டிங் செட்டிங் செய்ய உதவியது வைரலானது.

- Advertisement -

ரிஷப் பண்ட் சேட்டை:

இந்நிலையில் இப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் பார்ட்னர்ஷிப் அமைக்கும் போது ரிசப் பண்ட் அவருடைய பேட்டால் தம்முடைய பேட்டில் வேகமாக அடித்ததாக சுப்மன் கில் கூறியுள்ளார். எனவே தமக்கு ராசியான பேட்டை உடைத்து விடாதீர்கள் என்று அவரிடம் சொன்னதாக சுப்மன் கில் கலக்கப்பாக கூறியுள்ளார். இது பற்றி 3வது நாள் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு.

“இங்கிலாந்து தொடரில் விளையாடிய பேட்டை பயன்படுத்தி இந்தப் போட்டியில் நான் விளையாடுகிறேன். எனவே என்னுடைய பேட் கொஞ்சம் பழையது. அதில் ரிஷப் பண்ட் வேகமாக அடித்தார். அதனால் அவரிடம் என்னுடைய பழைய பேட்டை சேமிக்க முயற்சிக்கிறேன் என்பதால் களத்தின் நடுவே இப்படி வேகமாக அடிக்காதீர்கள் என்று சொன்னேன். அதற்கு முடியாது மீண்டும் செய்யலாம் என்று அவர் சொன்னார்”

- Advertisement -

உடைச்சுறாதீங்க ப்ரோ:

“அப்போது அவரிடம் ப்ரோ அமைதியாகுங்கள் என்று கூறினேன். அவருடன் நான் களத்திலும் களத்திற்கு வெளியேயும் நிறைய நேரங்களை செலவழித்துள்ளேன். எனவே காயத்திலிருந்து மீண்டு வந்த பின் அவருடைய முதல் அரை சதம் மற்றும் சதத்தை பார்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஏனெனில் அவர் இதற்காக கடுமையாக உழைத்துள்ளதை நான் பார்த்துள்ளேன்”

இதையும் படிங்க: 96 விக்கெட்ஸ்.. அனில் கும்ப்ளேவின் தனித்துவமான சாதனையை உடைத்த அஸ்வின்.. வால்ஷை முந்த வாய்ப்பு

“இங்கிலாந்துக்கு எதிரான கடந்த தொடர் எனக்கு நிறைய தன்னம்பிக்கை கொடுத்தது. ஏனெனில் அந்தத் தொடரிலும் முதல் இன்னிங்ஸில் எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக உங்களால் அதற்கு எதுவும் செய்ய முடியாது. அது போன்ற ஏமாற்றங்கள் களத்தில் இன்னும் நேரத்தை செலவிட்டு என்னுடைய விக்கெட்டுக்கு மதிப்பை கொடுப்பதற்கான உத்வேகத்தை கொடுக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -