இதை விட்டுட்டா ஜெய்க்க முடியாது.. இந்த காரணத்தால் இந்தியா தோற்றாலும் அதுல திருப்தி.. கேப்டன் கில்

Shubman Gill
- Advertisement -

ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19ஆம் தேதி துவங்கியது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவை டிஎல்எஸ் விதிமுறைப்படி ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆரம்பம் முதலே மழையால் 4 முறை பாதிக்கப்பட்ட அப்போட்டி இருதரப்புக்கும் 26 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.

அதில் முதலில் விளையாடிய இந்தியா 136/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோஹித் சர்மா 8, விராட் கோலி 0, கேப்டன் கில் 10 ரன்களில் அவுட்டானதால் 25/3 என ஆரம்பத்திலேயே இந்தியா திண்டாடியது. அப்போது மிடில் ஆர்டரில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 31, கேஎல் ராகுல் 38, நிதிஷ் ரெட்டி 19* ரன்கள் ஓரளவு இந்தியாவைக் காப்பாற்றினர்.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெற்றி:

ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மேத்தியூ குன்னேமான் 2, மிட்சேல் ஓவன் 2, ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு 26 ஓவரில் 131 ரன்கள் தேவை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவை கேப்டன் மார்ஷ் 46*, ஜோஸ் பிலிப் 37*, மாட் ரென்ஷா 21* ரன்கள் அடித்து 21.1 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர்.

அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் முதல் வெற்றியையும் பெற்றது. மறுபுறம் கடைசி 8 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியாவின் வெற்றி நடை புதிய கேப்டன் கில் தலைமையில் இப்போட்டியில் உடைந்தது. இந்நிலையில் பவர் பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்தால் வெற்றி பெறுவது கடினம் என்று கில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:

அதனாலேயே தோற்றதாக தெரிவிக்கும் அவர் பந்து வீச்சில் 22 ஓவர்கள் வரை போராடியது திருப்தியளிப்பதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பவர்பிளேவில் நீங்கள் 3 விக்கெட்டுகளை இழந்தால் வெல்வது கடினம். மோசமான துவக்கத்தைப் பெற்றால் நீங்கள் வெற்றியைப் பிடிக்க முயற்சிக்க வேண்டும். இந்தப் போட்டியில் நிறைய கற்றுக்கொண்ட எங்களுக்கு நிறைய நேர்மறையான பாடங்களும் கிடைத்தன”

இதையும் படிங்க: 500-ஆவது போட்டியில் இப்படியா நடக்கனும்? ரோஹித் சர்மா அளித்த ஏமாற்றம் – ரசிகர்கள் வேதனை

“130 ரன்களை கட்டுப்படுத்திய நாங்கள் போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்றோம். ஆனால் ஆழமாக எடுத்துச் செல்ல முடியவில்லை. அதில் நாங்கள் திருப்தியடைகிறோம். ரசிகர்கள் ஆதரவுக்காக நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இங்கே வந்த ஏராளமான ரசிகர்கள் அடுத்தப் போட்டியிலும் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement