ஜாக் கிராவ்லியுடன் மோதியது திருப்பு முனையில்ல.. இந்தியாவின் தோல்விக்கு அதான் காரணம்.. கில் பேட்டி

Shubman Gill
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அந்தத் தோல்விக்கு இந்திய கேப்டன் சுப்மன் கில் முக்கிய காரணமானதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 ஓவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

அப்போது இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார். அதனால் கோபமடைந்த கில் அவரிடம் சென்று கையை நீட்டி சில மோசமான வார்த்தைகளை சொல்லி வாக்குவாதம் செய்தார். அதே போல மற்ற இந்திய வீரர்களும் இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை சூழ்ந்து கொண்டு பதிலடி கொடுத்தது பரபரப்பை உண்டாக்கியது.

- Advertisement -

அதெல்லாம் காரணமில்ல:

கடைசியில் அதுவே எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற நெருப்பை இங்கிலாந்திடம் பற்ற வைத்ததாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார். வரும் போட்டிகளில் தங்களை சீண்டினால் அதே போன்ற பின்விளைவை சந்திக்கக்கூடும் என்று ஸ்டோக்ஸ் எச்சரித்தார். இந்நிலையில் ஜாக் கிராவ்லியிடம் தாம் மோதியது எந்த வழியிலும் திருப்பு முனையாக அமையவில்லை என்று கேப்டன் கில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

உண்மையில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 50 – 100 ரன்கள் முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது ரிஷப் பண்ட் ரன் அவுட்டானேதே திருப்பு முனையானதாக கில் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக 5 நிமிடங்கள் 5 நாட்களின் கடின உழைப்பை தீர்மானிக்காது. என்னிடம் கேட்டால் அது போட்டியின் டாப் 5 முக்கிய தருணங்களில் ஒன்றாக கூட இருக்காது”

- Advertisement -

கில் மறுப்பு:

“எங்களைப் பொறுத்த வரை ரிசப் ரன் அவுட் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் நாங்கள் 50 – 100 ரன்கள் முன்னிலையாகப் பெறுவோம் என்று நினைத்தோம். அதைப் பெற்றிருந்தால் கடைசி நாளில் இவ்வளவு சிரமத்தை சந்தித்திருக்க மாட்டோம். அதுவே மிகப்பெரிய திருப்புமுனை. அங்கே நாங்கள் முன்னிலையைப் பெற்றிருந்தால் இங்கிலாந்தை பின்னங்கால் வைக்க வைத்திருப்போம்”

இதையும் படிங்க: லார்ட்ஸில் இந்தியாவின் கையிலிருந்த வெற்றி பறிபோக.. கேஎல் ராகுலின் அந்த ஆசையே காரணம்.. கவாஸ்கர் அதிருப்தி

“ஆனால் 3வது நாளின் இறுதியில் ஸ்கோர் சமநிலை பெற்றது. அங்கிருந்து நன்றாக பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றது” என்று கூறினார். மேலும் வெற்றிக்காக இரு அணிகளும் மோதும் போது அப்படி மோதல்கள் வருவது விளையாட்டின் அங்கம் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கும் அவர் அனைத்து போட்டிகளிலும் எதிரணியுடன் மோதுவது தன்னுடைய வேலையில்லை என்றும் கூறினார்.

Advertisement