என் வாழ்க்கையில் கனவுல கூட இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும்ன்னு நினைக்கல.. சுப்மன் கில் பேட்டி

Shubman Gill
- Advertisement -

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் 2018 அண்டர்-19 ஐசிசி இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2021 வரை நிலையான வாய்ப்புகளைப் பெறவில்லை. அந்த சூழ்நிலையில் 2021 காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்த அவர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் சரித்திர வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு ஓரளவு நிலையான வாய்ப்புகள் கிடைக்கத் துவங்கியது. அதில் விராட் கோலி போல கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஓரளவு தொடர்ச்சியாக பெரிய ரன்களை குவிக்கத் துவங்கினார். அதனால் இந்திய கிரிக்கெட்டின் பிரின்ஸ் என்று சில ரசிகர்களால் பாராட்டப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணியில் 2023 சீசனில் அபாரமாக விளையாடி ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

- Advertisement -

கேப்டனாக உயர்வு:

2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ஓரளவு சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் தம்மை வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தி வருகிறார். அதன் காரணமாக அவரை இந்திய டெஸ்ட் அணியின் பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளது. இத்தனைக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அவர் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்ததில்லை.

இருப்பினும் வருங்காலத்தில் அசத்துவார் என்ற நம்பிக்கையுடன் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தியாவுக்காக அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்படுவேன் என்பதை கனவில் கூட நினைத்ததில்லை என கில் கூறியுள்ளார். இந்தப் பொறுப்பில் இந்தியாவை சிறந்த முறையில் வழிநடத்துவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கனவிலும் நினைக்கல:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக விளையாட வேண்டும், இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி பெரிய ஸ்கோர் அடித்து ஒரு பேட்ஸ்மேனாக போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவாக இருந்தது. ஆனால் இந்தியாவின் கேப்டனாக வேண்டும், இந்தியாவை தலைமை தாங்க வேண்டும் என்று கனவில் கூட நினைத்ததில்லை”

இதையும் படிங்க: மும்பை நான் வாங்க வேண்டிய டீம்.. ஜஸ்ட் மிஸ்ல ஆர்சிபியை இதுக்காக வாங்குனேன்.. விஜய் மல்லையா பேட்டி

“அதே சமயம் கிரிக்கெட்டில் விளையாடி வளரும் போது நீங்கள் கேப்டன்ஷிப் மற்றும் கேப்டன்கள் பற்றி புரிந்துகொள்ளத் துவங்குவீர்கள். இளம் பயனாக இருந்த போது இந்தியாவுக்காக விளையாடிப் போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருந்தது. தற்போது கேப்டனாக நான் எடுத்துக்காட்டாக நின்று முன்னோக்கி அணியை வழி நடத்துவேன்” என்று கூறினார்.

Advertisement