மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடாக இருக்கும் ஹார்டிக் பாண்டியா – குஜராத் அணிக்கு கேப்டனாக மாற இருக்கும் இளம்வீரர்

Pandya-and-Rohit
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஏலமானது டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக நவம்பர் 26-ஆம் தேதிக்குள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

அதோடு டிரேடிங் முறையில் வீரர்களை மாற்ற வேண்டுமென்றாலும் அதனை குறிப்பிடப்பட்ட தேதிக்குள் நடத்திக் கொள்ளுமாறும் அறிவித்திருந்தது. அந்த வகையில் ஏற்கனவே சில வீரர்கள் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு டிரேடிங் மூலம் மாற்றப்பட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹார்டிக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக டிரேடிங் செய்யப்பட இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி மும்பை அணிக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக கடந்த இரண்டு சீசன்களிலும் பெரிய அளவு விளையாடவில்லை.

அதன்காரணமாக அவரை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியானது ஹார்டிக் பாண்டியாவை மீண்டும் தங்களது அணியில் இணைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. அதேபோன்று ஹார்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பும் பட்சத்தில் ஓர் ஆண்டு அணியில் சாதாரண வீரராக விளையாடிட்டு அதன் பிறகு கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தும் கேப்டனாக பொறுப்பினை அளிக்க உள்ளதால் அந்த கோரிக்கையை ஹர்திக் பாண்டியா ஏற்பார் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் ஹர்டிக் பாண்டியா ஒருவேளை அப்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் அழைப்பை ஏற்று மீண்டும் அவர்களது அணிக்கு திரும்பினால் புதிய கேப்டனாக யார் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்துவார்? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஒருவேளை ஹர்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று விட்டால் இளம் துவக்க வீரரான சுப்மன் கில்லே குஜராத் அணியை வழி நடத்துவார் என்ற ஒரு புது தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : அந்த விசயத்துல வற்புறுத்தாதீங்க .. கோலிய ஃபாலோ பண்ணா ரோஹித் ஈஸியா அதை செய்யலாம்.. முரளிதரன் கருத்து

தற்போது மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக துவக்க வீரராக விளையாடி வரும் அவர் எதிர்கால சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படும் வேளையில் அவரை அடுத்த கேப்டனாக உருவாக்கும் முயற்ச்சியில் குஜராத் அணி இறங்கியுள்ளது. அதோடு ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக கேப்டன்சி செய்யும் பட்சத்தில் அவர் இந்திய அணிக்காகவும் கேப்டன்சி செய்ய வாய்ப்புள்ளதால் அவரை தங்களது புதிய கேப்டனாக அறிவிக்க குஜராத் அணி திட்டம் தீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement