நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் சரியா விளையாடலனா இவரோட கட்டம் முடிஞ்சிரும் – பரிதாப நிலையில் இளம்வீரர்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் மீது அனைவரது எதிர்பார்ப்பும் உள்ளது. மேலும் இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள் மேலும் இந்த போட்டியில் இந்திய அணி எவ்வாறு நியூசிலாந்து அணியை கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் இந்த இறுதி போட்டியில் சோபிக்க வில்லை என்றால் அணியில் இருந்து நீக்கப்படும் அபாயத்தில் உள்ளார். இந்திய அணிக்காக ஆஸ்திரேலிய தொடரின் போது அறிமுகமான சுப்மன் கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.

இருப்பினும் ஆஸ்திரேலிய தொடருக்கு அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் சரி, அதனை தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் சரி தனது பார்மை இழந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி வருகிறார். அவரது இந்த மோசமான பார்ம் இந்திய அணியின் நிர்வாகத்தை கவலை அடைய வைத்துள்ளது.

gill 1

அதன் காரணமாக தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் அவர் சொதப்பினால் நிச்சயம் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கிலாந்து தொடரில் மற்றொரு தொடக்க வீரரான மாயங்க் அகர்வால் ரோகித் சர்மாவுடன் களமிறங்குவார் என்று தெரிகிறது. எனவே நிச்சயம் இந்த இறுதிப் போட்டியில் சுப்மன் கில் தனது திறமையை வெளிப்படுத்தி ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

gill

ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரருக்கான இடத்திற்கு மாயங்க் அகர்வால் மட்டுமின்றி ப்ரித்வி ஷா, கே.எல் ராகுல் ஆகியோர் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement