
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த ஜூன் 6-ம் தேதி துவங்கிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது போட்டியின் மூன்றாம் நாளான ஜூன் 8-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. அந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த வகையில் நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி :
தங்களது முதல் இன்னிங்சில் 564 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணியிடம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக முதல் இன்னிங்சில் கே.எல் ராகுல் 100 ரன்களையும், கேப்டன் சுப்மன் கில் 126 ரன்களையும் குவித்தனர்.
அப்படி இந்த போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றத்தை கண்டுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஐ.சி.சி வெளியிட்டுள்ள பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் :
ஏற்கனவே பத்தாவது இடத்தில் இருந்த சுப்மன் கில் தற்போது இந்த சதத்தின் மூலம் இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்திற்கு வந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவிடம் இருந்து நிறைய கத்துக்கிட்டன்.. அதை இந்த தொடரில் யூஸ் பண்ணப்போறேன் – அல்லா கஸான்பர்
மூன்றாவது இடத்தில் ஜோ ரூட்டும், நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் உள்ளனர். டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை பொருத்தவரை இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்கள் மட்டுமே டாப் 10-ல் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் சுப்மன் கில் எட்டாவது இடத்திலும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒன்பதாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.