சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இந்த தொடரில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
விராட் கோலியின் மோசமான சாதனையை சமன் செய்த சுப்மன் கில் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியானது நேற்று ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய அணியானது தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் தோல்வியை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் மோசமான சாதனையை ஒன்றினை சமன் செய்துள்ளார். அதாவது இந்த தொடரின் 5 போட்டியிலும் டாசில் தோல்வியை சந்தித்த சுப்மன் கில் ஒரு டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளிலும் டாசை இழந்த கேப்டனாக விராட் கோலியின் வரிசையில் இணைந்துள்ளார்.
கடைசியாக 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்தத் தொடரில் அனைத்து போட்டிகளிலும் டாசில் தோல்வியை சந்தித்தார். அந்த தொடரில் இந்திய அணியானது (4-1) என்ற கணக்கில் இழந்தது.
அவருக்கு அடுத்து தற்போது சுப்மன் கில்லும் அவரைப் போன்றே நடப்பு ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் அனைத்து போட்டிகளிலும் டாசை இழந்து அந்த பட்டியலில் இணைந்துள்ளார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோன்று 13 முறை நடந்துள்ள வேளையில் சுப்மன் கில் முதல் தொடரிலேயே இந்த மோசமான நிலையை சந்தித்துள்ளார்.
இதையும் படிங்க : அவங்க இல்லாததால் இந்தியாவை சாய்க்க.. வேற வழியில்லாம இங்கிலாந்து பச்சை பிட்ச்சை போட்ருக்காங்க.. சுனில் கவாஸ்கர்
நேற்றைய முதல் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது 6 விக்கெட்டுகளை 204 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கருண் நாயர் 52 ரன்களையும், சாய் சுதர்சன் 38 ரன்களையும் குவித்தனர்.



