சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட அவர் எடுத்த இந்த பயிற்சியே காரணம் – அவரது தந்தை பேட்டி

gill
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர்கள் பலர் இன்றி இந்திய இளம் வீரர்கள் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

pant

- Advertisement -

இந்திய இளம் வீரர்களான நடராஜன், சுப்மன் கில், முகமது சிராஜ், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வரலாற்று டெஸ்ட் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தனர். இதற்காக பல்வேறு தரப்பில் இருந்தும் இவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சுப்மன் கில் மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடிய சுப்மன் கில் 259 ரன்களை குவித்து சிறப்பாக விளையாடி இருந்தார். இவர் ஆறு இன்னிங்சில் 45, 35, 50, 31,7, 91 ஆகிய ரன்களை குவித்து இருக்கிறார். பிரிஸ்பேனில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 91 ரன்களை குவித்து இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார்.

Gill-1

இதனால் கில்லை அனைவரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சுப்மன் கில்லின் தந்தை லக்விந்தர் சிங் “சுப்மன் கில் சிறப்பாக விளையாடினார். இவர் பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இவர் தனது 9 வயதில் இருந்தே பயிற்சி செய்து வருகிறார். இவருக்கு நான் தினமும் 1500 ஷார்ட் பிட்ச், பவுன்சர் பந்துகளை வீசி பயிற்சி கொடுத்தேன்.

Gill 2

அவருக்கு டர்ப் மைதானத்திலும் பயிற்சி கொடுத்தேன். ஒற்றை ஸ்டெம்பிள் பேட் செய்து பயிற்சி மேற்கொண்டார். இதன் காரணமாகவே தற்போது அனைத்து பந்துகளையும் பேட்டின் சென்டரில் வாங்குகிறார். மேட் பிட்சிலும் பயிற்சி கொடுத்து இருக்கிறேன்” என்றார் லக்விந்தர் சிங்.

Advertisement