என் மகன் சிறப்பாக விளையாடினாலும் சதமடிக்காதது வருத்தம் தான் – இந்திய இளம்வீரரின் தந்தை பேட்டி

Gill
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர்கள் பலர் இன்றி இந்திய இளம் வீரர்கள் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

IND-1

- Advertisement -

இந்திய இளம் வீரர்களான நடராஜன், சுப்மன் கில், முகமது சிராஜ், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வரலாற்று டெஸ்ட் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தனர். இதற்காக பல்வேறு தரப்பில் இருந்தும் இவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் பெற்று வருகின்றனர். இந்நிலையில், சுப்மன் கில் மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடிய சுப்மன் கில் 259 ரன்களை குவித்து சிறப்பாக விளையாடி இருந்தார். இவர் ஆறு இன்னிங்சில் 45, 35, 50, 31,7, 91 ஆகிய ரன்களை குவித்து இருக்கிறார். பிரிஸ்பேனில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 91 ரன்களை குவித்து இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார்.

Gill

இதனால் கில்லை அனைவரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சுப்மன் கில்லின் தந்தை லக்விந்தர் சிங் “ சுப்மன் கில் சிறப்பாக விளையாடினார். இவர் பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் கில் தனது 6 இன்னிங்சையும் தைரியமாக எதிர்கொண்டு விளையாடினார். ஆனால் இவர் 6 இன்னிங்சிலும் அவுட்டான விதம்தான் வருத்தமாக இருக்கிறது.

gill

பிரிஸ்பேனில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கில் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற ஒரு பந்தை ஆட முயற்சித்தார். ஆனால் இது தேவையற்றது. இவ்வாறு ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்தை அடிக்க முயன்று தனது விக்கெட்டை இழக்கிறார். இந்த தவறை அவர் உடனடியாக சரி செய்யவதே அவருக்கு நல்லது” என்று சுப்மன் கில்லின் தந்தை கூறியிருக்கிறார்.

Advertisement