சச்சின் மகள் சாரா டெண்டுல்கருடன் காதலா ? முதல் முறையாக தனது காதல் குறித்து பேசிய – சுப்மன் கில்

Gill

21 வயதான இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அதேபோன்று கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 378 ரன்களை குவித்துள்ளார்.

gill

3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 ரன்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சுப்மன் கில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்கள் கவனத்தை ஆண்டுதோறும் ஈர்த்து வந்தார். இதன் காரணமாக தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து செல்லவுள்ள இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவுக்கும் காதல் உள்ளது என்ற செய்திகள் வெகுகாலமாக சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன. மேலும் இருவரும் சில புகைப்படங்களை தனித்தனியே பகிரும் போது அவர்கள் கமெண்ட் செய்து கொள்வது வழக்கம்.

sara

அதனால் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த சுப்மன் கில் கூறுகையில் : நான் இப்போதும் சிங்கிளாக தான் இருக்கிறேன். என்னை போன்று ஒரு க்ளோனிங் நபரை உருவாக்கும் எண்ணம் எதிர்காலத்தில் இல்லை என வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.

- Advertisement -

sara 1

இவரது இந்த பதிவின் மூலம் சுப்மன் கில் இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. அதனால் சச்சின் டெண்டுல்கர் மகளுடன் காதல் என்று கூறுவதெல்லாம் முற்றிலும் தவறான ஒரு வதந்தி என்பது தெள்ளத்தெளிவாக உறுதியாகியுள்ளது. அதுமட்டுமின்றி சுப்மன் கில்க்கு தற்போது 21 வயதுதான் ஆகிறது. ஆனால் சாரா டெண்டுல்கருக்கு 23 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement