- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நீடிப்பார்களா? – சுப்மன் கில் விளக்கம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரர் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த வேளையில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இனி தொடர்ந்து விளையாட இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணிக்காக விளையாட இருவருமே விருப்பம் தெரிவித்திருந்தனர்.

ரோஹித் மற்றும் விராட் எதிர்காலம் குறித்து : சுப்மன் கில் கருத்து

ஆனால் இந்திய அணியின் நிர்வாகம் அவர்கள் இருவரையும் ஓய்வை நோக்கி அழுத்தம் தந்து வருவதாக கடந்த சில மாதங்களாகவே அதிகளவு பேசப்பட்டு வருகிறது. அதை உறுதி செய்யும் விதமாக எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அவருக்கு பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை அவர்களால் தொடர்ந்து இந்திய அணியில் நீடிக்க முடியுமா? அதேபோன்று அவர்களது கரியரை நிர்வாகம் முடிவுக்கு கொண்டு வருகிறதா? என்பது போன்ற பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது எதிர்காலம் குறித்த சில கருத்துக்களை பத்திரிகையாளர் சந்திப்பில் சுப்மன் கில் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே பல்வேறு போட்டிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்தவர்கள்.

- Advertisement -

அவர்களுடைய இத்தனை ஆண்டு பங்களிப்பும், அனுபவமும் தற்போதைய வீரர்களிடம் ஒப்பிட முடியாத ஒன்று. அவர்கள் இருவருமே லெஜண்ட்ஸ். எங்களுடைய எதிர்கால திட்டத்தில் அவர்கள் இருவருமே இருக்கின்றனர். நிச்சயமாக இன்னும் சில ஆண்டுகள் அவர்கள் இந்திய ஒருநாள் அணியுடன் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று சுப்மன் கில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ப்ளீஸ் இந்த ஒரு வாய்ப்பை தாங்க.. நிச்சயமா அவர் அசத்துவார்.. சாய் சுதர்சனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த – ரவிச்சந்திரன் அஷ்வின்

சுப்மன் கில் கூறியதை வைத்து பார்க்கையில் நிச்சயம் இன்னும் இரண்டு ஆண்டுகள் அவர்கள் தாக்குப்பிடித்து 2027 ஒருநாள் உலககோப்பை தொடரோடு விடை பெறுவார்கள் என்றே தெரிகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது அக்டோபர் 19-ஆம் தேதி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -