
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை பெற்ற இந்திய அணியானது அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வங்கதேச அணியை வீழ்த்தும் முனைப்புடன் காத்திருக்கிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியின் போது காயமடைந்த ரோகித் சர்மா இந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறினார். இருந்தாலும் காயத்திலிருந்து அவர் மீண்டும் வெளிவந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விளையாடுவார் என்று கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் செய்திகள் அதிகமாக உலா வந்தன.
இவ்வேளையில் இன்று வெளியான அறிவிப்பின் படி காயம் முழுவதுமாக குணமடையாத காரணத்தினால் ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் கே.எல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்றும் அதிகாரவபூர்வமான அறிவிப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வெளியானது.
இதன் காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் துவக்க வீரராக இளம் வீரரான சுப்மன் கில் தான் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக தனது வாய்ப்பை மீண்டும் பெற்றுள்ள சுப்மன் கில் ஒருவேளை முதல் போட்டியின் போது அடித்த சதம் போன்று இந்த போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளில் அவரை இந்திய அணியில் இருந்து நீக்க முடியாத சூழல் ஏற்படலாம்.
இதையும் படிங்க : கடைசி டெஸ்டிலும் திண்டாடும் பாகிஸ்தான் – 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்
அதேபோன்று ரோகித் சர்மாவின் வயது முதிர்வு மற்றும் அடிக்கடி காயத்தால் சிக்கும் தன்மை காரணமாக விரைவில் அவர் டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு சுப்மன் கில் நிரந்தர துவக்க வீரராகவும் மாற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.