269 ரன்ஸ்.. சச்சின், விராட் கோலியின் ஆல் டைம் சாதனைகளை உடைத்த கில்.. இந்தியாவுக்காக 2 புதிய வரலாற்று சாதனை

Shuman Gill 269
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்தங்கியது. அதைத் தொடர்ந்து 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 2, கருண் நாயர் 31 ரன்னில் அவுட்டானார்கள்.

இருப்பினும் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி 87 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக வந்த கேப்டன் கில் நிதானமாக விளையாடி அசத்தினார். எதிர்ப்புறம் வந்த ரிஷப் பண்ட் 25, நிதிஷ் ரெட்டி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் சதத்தை அடித்து அசத்தினார்.

- Advertisement -

கில்லியாக கில்:

அவருடன் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா நங்கூரமாக விளையாடி 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய அவர் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 89 ரன்னில் அவுட்டானார். அடுத்ததாக வந்த வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்த கில் இரட்டை சதத்தை அடித்து அசத்தினார்.

நேரம் செல்ல செல்ல இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறிய அவர் 250 ரன்கள் கடந்து இந்தியாவை 500 ரன்கள் தாண்ட உதவினார். அவருடன் சேர்ந்து விளையாடிய சுந்தர் பொறுப்புடன் 42 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்தி வந்த கில் ஒரு வழியாக 30 பவுண்டரி 3 சிக்சருடன் 269 (387) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

சச்சின், கோலியை முந்தி:

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் வாழ்நாள் சாதனை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் 2019 புனே டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி 254 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அத்துடன் சேனா நாடுகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்த கில் மற்றுமொரு புதிய சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: சச்சின், கவாஸ்கர், அசாருதீனின் 26, 47, 30 வருட சாதனை காலி.. ஆசிய, இந்திய கில்லியாக கில் 3 சரித்திர சாதனை

இதற்கு முன் 2004 சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் 241 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அவருடைய அற்புதமான ஆட்டத்தால் இந்தியா இந்தப் போட்டியில் 587 ரன்களை எடுத்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 2, சோயப் பசீர் 3, ஜோஸ் டாங் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

Advertisement