- Advertisement -
இந்திய கிரிக்கெட்

600 ரன்ஸ்.. இங்கிலாந்து மண்ணில் கிங் கோலியின் சாதனையை உடைத்த கில்.. ஆசிய கில்லியாக 2 புதிய சாதனை

இங்கிலாந்தின் மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 3வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 387 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக விளையாடும் இந்திய அணிக்கு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடி காட்ட முயற்சித்து 13 (8) ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் ராகுல் நிதானமாக விளையாடினார். அடுத்து வந்த கருண் நாயரும் 40 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தைப் பெற்ற போது ஜோ ரூட்டின் அபார கேட்ச்சில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

இங்கிலாந்தில் கில்லி கேப்டன்:

அதற்கடுத்ததாக வந்த கேப்டன் சுப்மன் கில் நங்கூரமாக விளையாட முயற்சித்த போது 16 ரன்னில் கிறிஸ் ஓக்ஸ் மிதவேக வலையில் விக்கெட்டை இழந்தார். இதையும் சேர்த்து இத்தொடரில் சுப்மன் கில் 600* ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்கள் குவித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன் 2018 இங்கிலாந்து தொடரில் விராட் கோலி 593 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். இது போக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த ஆசிய கேப்டன் என்ற சாதனையையும் சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் விராட் கோலி (593 ரன்கள்) அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

- Advertisement -

இந்தியா மீண்டுழுமா:

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் நங்கூரமாக விளையாடும் ராகுல் அரை சதத்தை அடித்தார். அப்போது நிறைவுக்கு வந்த 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் 145/3 ரன்களை எடுத்துள்ள இந்தியா இன்னும் இங்கிலாந்தை விட 242 ரன்கள் பின் தங்கியுள்ளது. களத்தில் ராகுல் 53*, ரிஷப் பண்ட் 19* ரன்களுடன் உள்ளார்கள்.

இதையும் படிங்க: எதிரணிக்கு பலவீனத்தை காட்டாத சுப்மன் கில் கேப்டனாக அசத்துவாரு.. இந்தியாவின் கம்பேக் பற்றி சச்சின் பாராட்டு

தற்போதைய நிலையில் லார்ட்ஸ் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலாக இருந்து வருகிறது. அதனால் இங்கிலாந்து பவுலர்களை எப்படியாவது சவாலை சமாளித்து இந்தியா முன்னிலை ரன்களை பெறுவது அவசியமாகிறது. அதற்கு யாரேனும் ஒரு பேட்ஸ்மேன் சதத்தை அடித்து பெரிய ரன்கள் குவித்து இந்தியாவை தூக்கி நிறுத்துவது அவசியமாகிறது.

- Advertisement -