
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற மூன்று போட்டியில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது 170 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரினை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்களை குவித்தது. பின்னர் 403 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 110 பந்துகளை சந்தித்து 22 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.
அதோடு இந்த இன்னிங்ஸ் அவருக்கு பல்வேறு சாதனைகளையும் பெற்றுத் தந்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஷிகர் தவான் மற்றும் முன்னணி வீரரான விராட் கோலி ஆகியோரது முக்கிய சாதனையையும் அவர் இந்த போட்டியில் தகர்த்துள்ளார். அந்த வகையில் சுப்மன் கில் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் அவர் அடித்த இந்த 154 ரன்கள் மூலம் இந்திய மண்ணில் அவர் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார்.
இதையும் படிங்க : 52 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத புதிய சாதனையை ஜோடியாக நிகழ்த்திய – சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன்
அதிலும் குறிப்பாக அவர் 19 ஆட்டங்களில் இந்த 1000 ரன்களை இந்திய மண்ணில் அடித்து அதிவேகமாக இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் 24 போட்டிகளில் 1000 ரன்கள் அடித்திருந்த வேளையில் அவர்களது சாதனையை 5 போட்டிகளுக்கு முன்பாகவே சுப்மன் கில் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.