- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கேப்டனாக மஹேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனையை முறியடித்த சுப்மன் கில் – விவரம் இதோ

இந்திய அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன் கில் இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று அக்டோபர் 19-ஆம் தேதி பெர்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்திருந்தது.

எம்.எஸ் தோனியின் சாதனையை தகர்த்த சுப்மன் கில் :

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒருநாள் அணியின் கேப்டனாக விளையாடிய இளம்வீரர் சுப்மன் கில் முன்னாள் இந்திய கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக கேப்டனாக அவர் தோனியின் சாதனையை முறியடித்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் சுப்மன் கில் நிகழ்த்திய சாதனை யாதெனில் : தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் ஏற்கனவே டி20 போட்டிகளிலும் ஒரு சில ஆட்டங்கள் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். தற்போது ஒருநாள் போட்டிகளிலும் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

இப்படி இந்திய அணிக்காக மூன்று வகையான வடிவத்திலும் இளம் வயதில் கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் இன்று நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக மகேந்திர சிங் தோனி தனது 26 வது வயது 279 நாட்களில் மூன்று வகையான இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

- Advertisement -

அவரது இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ள சுப்மன் கில் தனது 26 வது வயது 41 நாளிலேயே மூன்று வகையான இந்திய அணியும் வழிநடத்தி தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். வீரேந்திர சேவாக் தனது 28 ஆவது வயது 43-வது நாளில் அனைத்து வகையான இந்திய அணியையும் வழிநடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 500-ஆவது போட்டியில் இப்படியா நடக்கனும்? ரோஹித் சர்மா அளித்த ஏமாற்றம் – ரசிகர்கள் வேதனை

இந்திய அணியின் எதிர்கால நிரந்தர கேப்டனாக பார்க்கப்படும் சுப்மன் கில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலககோப்பைக்கு பின்னர் டி20 போட்டிகளிலும் முழுநேர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -