இந்திய அணியில் வாய்ப்பு மறுப்பு .! ஷ்ரேயாஸ் ஐயரின் உருக்கமான வேண்டுகோள்

இந்திய அணி இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி வரும் காரணத்தினால் அணியில் புது வீரர்களை கொண்டு வர இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ள இந்த சமயத்தில் இந்திய அணியின் இளம் ஆட்டக்காரர் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் தான் இடம்பெறாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் கடைசியாக நடந்த இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய நிலையில் இந்திய அணியில் புது மாற்று வீரர்களை கொண்டு வர கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

iyer

இந்திய ஏ அணியின் கேப்டனாக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் தான் சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறேன் மேலும் வாய்ப்புக்காக பொறுமை காப்பது மிகவும் கடினமாக உள்ளது. நான் இதுபோன்ற வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்றால் தான் தன்னால் சர்வதே அளவில் திறமையாக இருக்கும் பல பந்து வீச்சாளர்களை எதிர்த்து தன்னுடய திறமையை நிரூபிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்காததால் நான் நான் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை சந்திக்கும் போது சற்று சிரம படுவதாக தனது ஆதங்கத்தினம் தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட் ப்ரிதிவி ஷா மயங்க் அகர்வால் ஆகியோரது பெயர்களை பரிசீலனை செய்யும் இந்த நேரத்தில் இந்திய அணிக்காக 2017ஆம் ஆண்டே இடம்பிடித்து அதை தக்க வைக்க முடியாமல் ஐயர் தவித்து வருகிறார்.

iyer

இந்திய அணிக்காக இவர் 6 ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார் அதிக பட்சமாக 88 ரன்களை குவித்துள்ளார் மேலும் ஐ.பி.எல்.போட்டிகளில் டெல்லி அணிக்காக சிறப்பாக ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிட தக்கது. கடைசியாக தென்னாபிரிக்க ஏ அணிக்கு எதிராக இவரது தலைமையில் இந்திய அணி ஏ டெஸ்ட் போட்டியினை வென்றதும் குறிப்பிடத்தக்கது.