இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி வந்தார். குறிப்பாக புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பின்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அண்மையில் ஃபார்ம் அவுட்டானார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மோசமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியதால் அந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியோடு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இவ்ளோ திமிர் ஆகாது :
பின்னர் இடைப்பட்ட எஞ்சிய நேரத்தில் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவரிடம் கேட்டுக் கொண்டது. ஆனால் பி.சி.சி.ஐ-யின் அந்த வேண்டுகோளை மறுக்க ஷ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி தொடரில் விளையாடவில்லை. ஆனால் காயம் காரணமாகவே அவர் அந்த தொடரில் விளையாடாமல் இருந்தார்.
இருப்பினும் அவர் மீது அதிருப்தி அடைந்த பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இருந்து அவர் பெயரை நீக்கியது. அதோடு டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அதன் பின்னர் தொடர்ச்சியாக அவர் இந்திய அணியில் இருந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப வேண்டுமெனில் துலீப் கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற சூழல் அவருக்கு இருந்தது. அந்த வகையில் இந்தியா டி அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரிலும் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அவரது இந்த மோசாமான ஆட்டம் அனைவரது மத்தியிலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடரில் ஒரே ஒரு அரைசதம் அடித்த அவர் தற்போது நடைபெற்று வரும் ஒரு போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது கூலிங் கிளாஸ்ஸுடன் களமிறங்கியது மட்டுமின்றி அப்படி விளையாடிய முதல் பந்தியிலேயே ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க : என் பையன டீம் விட்டு தூக்குனதுக்கு காரணமே அவர்தான்.. பாக் வீரர் அசாம் கான் பற்றி பேசிய – மொயின் கான்
அவரது அந்த நடவடிக்கையை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் கிரிக்கெட் களத்திற்கு கூலிங் கிளாஸ் உடன் வருவதா? அப்படி வந்தும் இப்படி ஆட்டமிழப்பதா? உங்களுக்கு ரொம்பவே திமிர்தான். இனி டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது என அவரை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.



