இப்படியா பண்ணுவீங்க ? பீல்டிங்கில் முட்டாள்தனம் செய்த ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

Iyer

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு இந்தூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

toss

இந்த போட்டியில் முதலில் துவக்க வீரராக களமிறங்கிய குணதிலகா மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் முறையே 20, 22 ரன்கள் அடித்து துவக்கத்தை கண்டது. முதல் விக்கெட்டை சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். அதன்பிறகு ஏழாவது ஓவரின் 4-வது பந்தில் குணதிலகாவை நவதீப் சைனி தனது அபாரமான வேகப்பந்து வீச்சின் மூலம் கிளீன் போல்ட் செய்தார்.

அதே ஓவரில் அடுத்த பந்தில் இலங்கை வீரர் தட்டிவிட்டு ஓட நினைத்தார். பந்து நேராக ஸ்ரேயாஸ் ஐயரின் கைகளுக்கு நேராக சென்றது. பந்து கைக்கு சென்றதால் இருவரும் மைதானத்தின் நடுவே குழப்பத்தில் நின்றனர் ஆனால் குஷால் பெரேரா எளிமையாக ரன் அவுட்டாகி இருக்க வாய்ப்பு இருந்தும் ஸ்ரேயாஸ் ஐயர் எளிமையான திசையில் த்ரோ அடிக்காமல் தேவையில்லாமல் மாற்றி அடித்தார்.

iyer 1

இதன் மூலம் எளிதான ரன்அவுட் வாய்ப்பில் இருந்து குஷால் பெரேரா தப்பித்தார். ஐயர் பந்தினை பிடித்ததும் ஓடிச்சென்று ரன் அவுட் செய்யும் அளவிற்கு ஈசியாக நேரம் இருந்த வாய்ப்பை த்ரோ அடித்து ஐயர் சொதப்பினார். இதனைக் கண்ட கேப்டன் கோலி கடுப்பாகி கையை எதிர்திசையில் காட்டி சிரித்தார். இப்படி ஒரு எளிமையான வாய்ப்பை விட்டு விட்டாரே என்று மைதானத்தில் வீரர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -