இந்திய அணியில் இவர் சிங்கம் மாதிரி. இவர் டயர்டு ஆகி நான் பாத்ததே இல்ல – ஷ்ரேயாஸ் ஐயர் புகழாரம்

Iyer
- Advertisement -

இந்திய அணியில் 4 ஆம் நிலை வீரராக கிட்டத்தட்ட நிரந்தர இடம் பிடித்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் தற்போது ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இந்த கொரோனா ஓய்வு நேரத்தில் இந்திய வீரர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த வீரர்கள் குறித்த கருத்துக்களை சமூகவலைத்தளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

Iyer-3

- Advertisement -

அதன்படி சமூக வலைதளத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஏற்பாடு செய்திருந்த நேரலையில் ஷ்ரேயாஸ் ஐயர் பல வீரர்களை பற்றி பேசி இருந்தார். அப்போது தனது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார் இதுகுறித்து அவர் கூறியதாவது… விராட் கோலி ஒரு அசாத்தியமான வீரர்.

அவர் எப்போது களம் இறங்கினாலும் தனது முதல் போட்டியை போல் கருதி அபாரமாக விளையாட முயற்சிப்பார். அவர் ஒரு சிங்கம், அந்த அளவிற்கு அவரது ஆட்டம் இருக்கும். அவரது உடல் மொழியே அவரது ஆட்டத்தை பற்றி பேசும். அவரிடமிருந்து இவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ளலாம்.

Iyer-2

நானும் கோலியிடம் இருந்து அதனை எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறேன் என்று கூறினார். மேலும் இந்திய அணியில் இடம் பெற முயற்சிக்கும் ஒவ்வொரு வீரருக்கும் அவர் ஒரு முன்மாதிரி வீரராக திகழ்ந்து வருகிறார் என்று கூறியுள்ளார் ஸ்ரேயா ஐயர். முன்னதாக தற்போது இந்திய அணியில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட இளம் வீரராக இவர் இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் பல ஆண்டுகால 4ஆம் இடைத்தேர்தலுக்கு இவர் விடையாக அமைந்தார். மேலும், தற்போது அந்த இடம் தனக்குத்தான் என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார். அதனை தாண்டி இவர் நன்றாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

Iyer

சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடி ஒரு சதம் விளாசியது மட்டுமின்றி 217 ரன்கள் விளாசி இருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.

Advertisement