அணியில் இடம் கிடைத்தாலும் இவர்கள் இருவரும் என்னை விளையாட விடமாட்டார்கள் – ஷ்ரேயாஸ் ஐயர் புலம்பல்

Iyer
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது. நேற்று இந்திய அணி இந்த தொடருக்காக அமெரிக்கா பறந்தது குறிப்பிடத்தக்கது.

india

- Advertisement -

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் ஷ்ரேயாஸ் நிலை குறித்து இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஐயர் இடம் பெற்றிருந்தாலும் நான்காவது வீரராக ராகுல் மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் ஒவ்வொரு தொடரின் போதும் அணியின் வியூகத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால் வீரர்கள் மாற்றம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

iyer

ஒரு வீரருக்கு நிலையான வாய்ப்பு கிடைக்கும் போது தான் அவருடைய திறமையை வெளிப்படுத்தி அவர் அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியும். அந்த வகையில் ஐயர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படாமல் மறுக்கப்பட்டு வந்தது. அப்படி ஒருவேளை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தால் இன்று அவர் இந்திய அணியின் நிரந்தர ஆட்டக்காரராக இருந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

iyer

இந்த தொடரில் ஒரு சில போட்டிகளில் மட்டும்தான் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. அவ்வாறு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் அவர் தவறும் பட்சத்தில் அவர் மீண்டும் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்படுவார். எனவே இந்த தொடரை மிகவும் எதிர்பார்த்து உள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

Advertisement