என்னை நீக்கிய பி.சி.சி.ஐ-க்கு பதிலடி கொடுக்க தான் இந்த 2 கோப்பையையும் ஜெயிச்சேன் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

Shreyas
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் வெளியிடப்பட்ட இந்த வருடாந்திர ஒப்பந்தப்பட்டியிலில் அவருடன் சேர்த்து இஷான் கிஷனையும் நீக்கி பிசிசிஐ அதிரடி காட்டியிருந்தது.

உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று கூறியும் அவர்கள் இருவரும் அந்த தொடரில் பங்கேற்கவில்லை என்பதாலே இந்த நீக்கம் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதோடு சில முன்னாள் வீரர்களும் பி.சி.சி.ஐ யின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி பங்கேற்று விளையாடி வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர்கள் இருவருக்கும் பிசிசிஐ இடம் அளிக்கவில்லை. இந்நிலையில் தன்னை வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் அதனால் எனக்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்பட்டது என்றும் ஷ்ரேயாஸ் ஐயர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நான் மிகச் சிறப்பாக செயல்பட்டேன். உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் சற்று ஓய்வெடுக்க விரும்பினேன். அதோடு எனது உடலில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் வேலை செய்து மீண்டும் வலிமையாக திரும்ப வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

அந்த இடைவெளியில் எனக்கும் பிசிசிஐ-க்கும் சரியான தகவல் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. எனவே சில முடிவுகள் எனக்கு சாதகமாக செல்லாமல் போய்விட்டது. அதன் பின்னர் எனக்காகவே நான் ரஞ்சி கோப்பையில் விளையாட முடிவு செய்தேன். நான் ரஞ்சித் கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பைகளை வென்றால் அது பிசிசிஐ எடுத்த முடிவுக்கு சரியான பதிலடியாக இருக்கும் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : 2 பேர் போதாது.. பாகிஸ்தானை தோற்கடிக்க அவரை இந்தியா பிளேயிங் லெவனில் சேர்க்கனும்.. ஹர்பஜன் கருத்து

அதிர்ஷ்டவசமாக நான் எதிர்பார்த்த இரண்டு கோப்பைகளுமே என் வசம் வந்து சேர்ந்தது. தற்போது நான் மிகச் சிறப்பான பார்மில் இருந்தும் இந்திய அணியில் இல்லாதது வருத்தம் அளிப்பதாக தனது அதிருப்தியை ஷ்ரேயாஸ் ஐயர் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement