இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு டையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 348 ரன் அடிக்க இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக அமைந்தது.

இந்நிலையில் முதல் போட்டியில் சதமடித்த ஸ்ரேயாஸ் அய்யர் இந்த போட்டி குறித்து பேசியுள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது : முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது பெரிய விஷயம் இல்லை. அது வெறும் ஒரு தோல்வி தான். இதுபோன்ற தோல்விகளை எங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் இதற்கு முன்னதாக சந்தித்துள்ளோம். எங்களுக்கு ஒரு அணியாக பெரிய நம்பிக்கை இருக்கிறது. அடுத்த போட்டியில் கண்டிப்பாக மீண்டும் வருவோம். இதேபோன்று கடந்த பல போட்டிகளில் செய்திருக்கிறோம்.
இந்த தோல்வியை நேர் முழுமையாக எடுத்துக் கொண்டு அதில் இருந்து பின்னோக்கி சென்று அடுத்த போட்டியில் நன்றாக ஆடவேண்டும். நான் இங்கு நன்றாக ஆடியதற்குக் காரணம் இந்திய ஏ அணியில் இதற்கு முன்னதாக விளையாடி இருக்கிறேன். ஆனால் அப்போது நான் 4ஆம் இடத்தில் களம் இறங்கவில்லை.

மனிஷ் பாண்டே அந்த இடத்தில் களம் இறங்கினார். இருந்தாலும் இந்த இடம் நம்முடையது என்று எடுத்துக் கொண்டு ஆட முடியாது. எந்த இடத்தில் இறங்கினாலும் நன்றாக ஆட வேண்டும் என்பதே எனது இலக்கு இவ்வாறு கூறினார் ஸ்ரேயாஸ் அய்யர். இந்த தோல்வியை மறந்து அடுத்த போட்டியில் பலமாக திரும்பி வருவோம் என்று கூறினார்.



