நேற்றைய போட்டியில் 5 ஆவது வீரராக களமிறங்கியது ஏன் ? – ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்

Iyer
- Advertisement -

இங்கிலாந்து உடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , ஷிகர் தவான் மற்றும் ராகுல் ஜோடி களம் இறங்கியது. களமிறங்கிய வேகத்திலேயே ராகுல் வெளியேற பின்னர் வந்த கோலி டக் அவுட்டாக தவானும் ஒரு கட்டத்தில் வெளியேறிவிட இந்திய அணி தடுமாறியது.

eng

- Advertisement -

பின்னர் ஸ்ரேயாஸ் ஐய்யர் இன் உதவியால் 124 என்கிற டீசன்ட் ஸ்கோரை இந்திய அணி எட்டியது. இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது ஸ்ரேயாஸ் ஐயர் தான் களமிறக்க படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் , ரிஷப் பண்ட் நம்பர் 4 வரிசையில் களமிறங்கி அதிர்ச்சி அளித்தார். பின்னர் தவான் ஆட்டமிழக்க இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னரே நம்பர் 5 வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் பண்ட்டுன் ஜோடி போட்டு அணியை சரிவிலிருந்து மீட்டார்.

இது குறித்து பேசிய ஐயர் கூறுகையில் : கிரிக்கெட்டில் எந்த இடத்தில் இறக்கப் பட்டாலும் நன்றாக பெர்பார்ம் செய்ய வேண்டும். அப்படித்தான் நேற்று நான் ஐந்தாம் இடத்தில் களமிறங்கி செய்தேன்.இங்கிலாந்து பவுலர்கள் ஒருபக்கம் தங்களது அதிரடி பவுலிங்கில் எங்கள் அணியின் பார்ட்னர்ஷிப்பை குறைத்துக் கொண்டு வந்தனர். எனவே, நேற்று நான் அணியை சரிவிலிருந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்கிற முனைப்பில் ஆடினேன்.

shreyas

இவ்வாறு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணிக்காக பலமுறை ஆடி இருக்கிறேன். முடிந்தவரை நின்று அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்கிற மைண்ட் செட் உடன் மிக நிதானமாக செயல் பட்டேன்.எந்த இடத்தில் இறங்கினாலும் எனது ஆட்டத்தை நான் சிறப்பாக சரிவரச் செய்வேன் என்று அவர் கூறி முடித்தார்.

archer 1

ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 128 ஆக உயர்த்தினாலும்.பின்னர் வந்த ஆடிய இங்கிலாந்து அணி அந்த ஸ்கோரை 15.3 ஓவர்களிலேயே அடுத்து முடித்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement