இந்திய அணியின் 4 ஆவது இடத்திற்கான பிரச்சனை இவரால் முடிவுக்கு வந்துள்ளது – விவரம் இதோ

Ind
- Advertisement -

இந்திய அணியில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு பிரச்சினை யாதெனில் முதல் மூன்று வீரர்கள் சிறப்பாக ஆடுகையில் பின்னர் நான்காவது வீரர் மற்றும் 5 6 என மிடில் ஆடர் பிரச்சனை சமீபத்தில் சிக்கலாகவே இருந்தது. தோனி தலைமையிலான இந்திய அணியில் யுவராஜ், ரெய்னா போன்ற வீரர்கள் மிடில் ஆர்டரில் அசத்தினார்கள். தோனியும் பின்னர் களமிறங்கிய இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார்.

Rahul

- Advertisement -

ஆனால் கோலி தலைமையிலான அணியில் சமீபகாலமாக மிடில் ஆர்டர் களில் பல நேரங்களில் வீரர்கள் சொதப்பி வருகிறார்கள். தவான், ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடினாலும் அதன் பின்னர் வரும் யாரும் நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த நான்காவது இடத்திற்கு பல வீரர்களை இந்திய அணி சோதித்தது.

குறிப்பாக ராயுடு, விஜய் சங்கர், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் என பலரையும் 4 ஆவது இடத்தில் இந்திய அணி சோதித்தது. ஆனால் இவர்கள் யாரும் சோபிக்காததால் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டவர் ஸ்ரேயாஸ் அய்யர். நீண்ட நாட்களுக்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் தற்போது மிகப்பெரிய தொடரை தொடங்கிய இந்திய அணி முதல் டி20 போட்டியில் 204 ரன்கள் என்ற பெரிய இலக்கினை அசால்டாக சேசிங் செய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ஐயரின் பேட்டிங் அமைந்தது என்றால் அது உண்மையே.

Iyer-1

ஏனெனில் கோலியும், ராகுலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற கிட்டத்தட்ட 90 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் எந்தவித பதட்டமும் இல்லாமல் ஐயர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெற வைத்தார். மேலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவரது அதிரடியும் அவ்வப்போது மாறி வருவதால் அவர் இந்திய நிச்சயம் சிறப்பான இடத்தை பிடிப்பார் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். உலக கோப்பை தொடரில் மிடில் ஆர்டரில் தெளிவாக இல்லாததால் இந்திய அணி பிரச்சனைக்கு உள்ளானது.

அதன் பிறகு கொண்டுவரப்பட்ட ஐயர் தொடர்ந்து பல தொடர்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தார். அதன் பின்னர் தற்போது ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்கு நான்காவது இடத்தில் உள்ள ஒரு பிரச்சனை நீங்கி உள்ளதாகவும் இவர் நிச்சயம் நீண்ட காலம் இந்திய அணியில் விளையாடுவேன் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement