துல்லியமான ராக்கெட் த்ரோ மூலம் வார்னரை காலி செய்த ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும் வீடியோ

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டியும் சிட்னி நகரில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது.

indvsaus

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர். அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.

இந்தப் போட்டியிலும் கடந்த போட்டியை போன்றே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களான வார்னர் 77 பந்துகளை சந்தித்த நிலையில் 3 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரி என 83 ரன்களை அடித்தார். ஒரு கட்டத்தில் அவரை வீழ்த்தவே முடியாது என்று நினைத்த நிலையில் பவுண்டரி லைனில் இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் தனது துல்லியமான த்ரோ மூலம் ரன் அவுட் செய்து வெளியேறினார்.

கடந்த போட்டியில் செஞ்சுரி பாட்னர்ஷிப் அமைத்த வார்னர் பின்ச் ஜோடி இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த ஷார்ப் த்ரோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ அதிகளவு பகிரப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement