கோலியிடம் இருந்து இதைத்தான் நான் கற்றுக்கொண்டேன். அதுவே எனது ப்ளஸ் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

Iyer-3
- Advertisement -

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

iyer 1

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரரான ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப் பெரும் பங்கினை அளித்தார். முதல் போட்டியில் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் வெற்றி பெற வைத்த ஐயர் இரண்டாவது போட்டியிலும் 44 ரன்கள் அடித்து அசத்தினார். அதன்பின்னர் இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் :

எந்த அளவு ரன்களை துரத்த வேண்டும் என்றும் எந்த ரன் ரேட்டில் துரத்த வேண்டும் என்றும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விராத் கோலியை தான் நான் நினைவில் வைத்துக் கொள்வேன். களமிறங்கும் போதே சூழலுக்கு ஏற்ப கோலி தயாராகிவிடுவார் நான் உண்மையில் அவரிடமிருந்து சில விடயங்களை கற்றுக் கொண்டேன். இந்த விடயங்கள் எனக்கு மிகவும் உதவுகின்றன.

மேலும் ரோகித் சர்மா விடமும் இருந்தும் சில விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதை சிறந்த முறையில் அதனை பயன்படுத்தி ஒரு இளம் வீரராக அதனை செயல்படுத்தி வருகிறேன். அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நான் இந்திய அணி வெற்றிபெற வைக்கும் நோக்கில் செல்கிறேன் என்று ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement