“பிகில்” விஜய் போன்று புதிய கெட்டப்புக்கு மாறிய ஷ்ரேயாஸ் ஐயர் – புகைப்படம் இதோ

Vijay

இந்திய அணியில் சமீப காலமாகவே பேசப்பட்டு வரும் ஒரே விடயம் யாதெனில் சரியான நபரால் நிரப்பப்படாமல் இருந்த இடமான நம்பர் 4 தான். இந்த இடத்தில் யார் சரியாக அமைய போகிறார்கள் என்று ஏகப்பட்ட வீரர்களை இந்திய அணி சோதனை செய்தது அப்படியிருந்தும் உலக கோப்பை தொடர் முடியும் வரை அந்த நிலைமை மாறாமல் இருந்தது.

Iyer

அதன் பின்னர் அந்த பிரச்சனையை தீர்க்கும் விதமாக நான்காவது இடத்தில் இறங்க இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய ஐயர் தற்போது சிறப்பாக விளையாடி. வருகிறார் இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் 476 ரன்களை குவித்துள்ளார்.

கடைசியாக விளையாடிய 6 ஒரு நாள் போட்டிகளில் 5 அரை சதங்கள் அடித்து நான்காவது இடத்தில் நான்தான் விளையாட போகிறேன் என்பதை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக நாளை மறுதினம் துவங்க உள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இடம்பெற்றுள்ள ஐயர் இந்த செயல்படுவார் என்று அனைவரும் நம்புகின்றனர்.

iyer

இந்நிலையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஐயர் புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார். வழக்கமாக மீசை தாடி என்று காணப்படும் ஐயர் தற்போது பிகில் விஜய் பாணியில் வலது கண்ணுக்கு மேலே புருவத்தில் ஒரு கோடு போட்டும், தாடியை க்ளீன் ஷேவ் செய்து புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார். இவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது

- Advertisement -